சூர்யா படத்திலிருந்து பிரபல நடிகர் விலக காரணம் என்ன?
சென்னை: சூர்யாவின் 37வது படத்திலிருந்து விலகுவதாக பிரபல நடிகர் அறிவித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன் தயாரிக்கும், நடிகர் சூர்யாவின் 37வது படத்தை கேவி.ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் சூர்யாயாவுடன் முதல் முறையாக ஆர்யா கைகோர்த்துள்ளார். மோகன்லால், போமன் இரானி, சயிஷா மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமான தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஏபிசிடி என்ற திரைப்படத்தின் தேதியும், இந்த திரைப்படத்தின் தேதியும் ஒன்றாக இருப்பதால் வேறு வழி இல்லாமல் சூர்யா படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சூர்யாவுடன் நடிப்பதற்கு மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்ததாகவும், ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் விலகுவதை புரிந்து கொண்டு கே.வி.ஆனந்த் தன்னுடைய முடிவை ஏற்றுக்கொண்டார் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த வாய்ப்பு கொடுத்த நடிகர் சூர்யா, இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் லைகா புரொடக்ஷன் நிறுவனத்திற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியான அல்லு சிரிஷ் அமெரிக்கன் பார்ன் கன்ஃபியூஸ்டு தேசி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது மலைளத்திலும் ரிமேக் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











