ஆலியா பட்டின் வீட்டு வாடகை எத்தனை கோடி தெரியுமா? யப்பா தலையே சுத்துதே!

மும்பை: ரன்பீர் கபூரும், அலியாபட்டும் புனேயில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் வாடகைக்கு குடியேறி உள்ளனர். அந்த வீட்டின் மாத வாடகையை கேட்டு நமக்கே சிறிது நேரம் தலை சுற்றிவிட்டது.

பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்த போது ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

Popular actress Alia bhatt and Ranbir Kapoor have moved into a new house on rent for Rs 4 lakh

2018ம் ஆண்டு முதல் க்யூட் ஜோடியாக வலம் வந்த இவர்கள் கடந்த ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ரன்பீர் கபூர்-ஆலியா பட்: திருமணத்திற்கு பிறகும் ஆலியா பட் பல படங்களில் பிஸியாக நடித்து வந்த நிலையில், நவம்பர் மாதம் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர்.

பணத்திற்காக திருமணம்: அண்மையில் நடிகை கங்கனா ரனாவத் ஆலியா பட் மற்றும் ரன்வீர் கபூர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், இந்தி நட்சத்திர ஜோடிகள் பிரம்மாண்டமாக ஊரைக்கூட்டி திருமணம் செய்து கொண்டாலும், இருவரும் இப்போது வேறு வேறு மாடியில்தான் வசிக்கிறார்கள். ஆனால், வெளி உலகத்திற்கு சேர்ந்து இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள், என சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார்

Popular actress Alia bhatt and Ranbir Kapoor have moved into a new house on rent for Rs 4 lakh

யப்பா தலையே சுத்துதே: இந்த நிலையில் ரன்பீர் கபூரும், அலியாபட்டும் புனோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆடம்பரமான சொகுசு வீடு ஒன்றில் வாடகைக்கு குடியேறி இருக்கிறார்கள். இந்த வீட்டின் மாத வாடகை மட்டும் ரூ.4 லட்சம் ரூபாயாம், இரண்டாவது வருடத்திற்கு ரூ.4.2 லட்சம் என்றும், மூன்றாவது வருடத்திற்கு ரூ.4.4 லட்சம் என்றும் வாடகையை உயர்ந்துக்கொண்டே செல்லுமாம்.

38 கோடியில் புதுவீடு: ரன்பீர் கபூரும், அலியாபட்டும் மும்பையில் பாந்திரா பாலிஹில் பகுதியில் ஏரியல் வியூ என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் ரூ.38 கோடிக்கு வீடு வாங்கி உள்ளனர். 2 ஆயிரத்து 497 சதுர அடி உள்ள இந்த வீட்டை அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் வாங்கி உள்ளனர். இந்த வீட்டில் உள்கட்டமைப்பு கட்டுமான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வீட்டின் வேலைகள் முடிந்ததும் இவர்கள் புது வீட்டில் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X