அரைகுறை ஆடை.. ஏர்போர்ட்டில் காதலருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்!

காதலருடன் அத்துமீறி நடந்துகொண்ட நடிகை செரா நேதன் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டார்.

Recommended Video

அரைகுறை ஆடை நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்!

சிட்னி: ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் காதலருடன் அத்துமீறி நடந்துகொண்ட நடிகை செரா நேதன் அவமானப்படுத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகை செரா நேதன் ஒரு எழுத்தாளரும் கூட. இவர் சமீபத்தில் மெல்பர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்தில் தன் காதலருடன் காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் காலியாக இருந்த இருக்கையில் அமராமல் தனது காதலரின் மடியில் அமர்ந்து கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தார். மேலும் அவர் அரைகுறையாக ஆடை அணிந்திருந்தார்.

ஊழியர்கள் எச்சரிக்கை

ஊழியர்கள் எச்சரிக்கை

இதைப் பார்த்த சிட்னி விமான நிலைய பெண் ஊழியர்கள் இருவர், செராவிடம் சென்று காலியாக உள்ள இருக்கையில் அமரும்படி கூறினர். ஆனால் செரா அதை கேட்காமல், தொடர்ந்து காதலர் மடியில் அமர்ந்திருக்கிறார்.

நடிகையின் பிடிவாதம்

நடிகையின் பிடிவாதம்

செராவின் செயலால் ஆத்திரமடைந்த விமான நிலைய ஊழியர்கள், குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் பொது இடத்தில் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என மீண்டும் எச்சரித்தனர். ஆனால் அப்போது செரா அவர்கள் பேச்சை கேட்கவில்லை என தெரிகிறது.

 அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

இதையடுத்து தங்களுடைய மேலதிகாரியை அழைத்து செராவின் நடவடிக்கை குறித்து ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். நடிகை செரா உள்பனியன் போன்று மேலாடையும், டிராக் பேன்ட்டும் அணிந்திருப்பதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், அதையே காரணமாகக் கூறி செராவை போர்டிங் ஹாலில் இருந்து வெளியே அனுப்பிவிட்டனர்.

நடிகை புகார்

நடிகை புகார்

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செரா, விமான நிலையத்தில் தான் அணிந்திருந்த ஆடையில் என்ன தவறு இருக்கிறது என வினவி, அவருடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த உடையை அணிந்ததற்காக விமான நிலைய ஊழியர்களால் பொதுவெளியில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் செரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

விமான நிறுவனம் பதில்

விமான நிறுவனம் பதில்

இதுகுறித்து சம்மந்தப்பட்ட விமான நிறுவனத்துக்குப் புகார் ஒன்றையும் செரா அனுப்பியிருக்கிறார். அவரது புகாருக்கு பதிலளித்த விமான நிறுவனம், "உங்களைத் தரக்குறைவாக நடத்தியதற்கு வருந்துகிறோம். பொது இடத்தில் காதலர் மடியில் அமர்வது சரியில்லை என்று ஊழியர்கள் கருதியுள்ளனர்.

மன்னிப்பு கோரிய நிறுவனம்

மன்னிப்பு கோரிய நிறுவனம்

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்களின் காதலன் மிகவும் அதிர்ஷ்டசாலி. அந்த நேரத்தில் நீங்கள் தரக்குறைவான செயலில் ஈடுபடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இதுபோன்ற செயல்கள் தனிப்பட்ட இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும். உங்களைத் தரக்குறைவாக விமர்சித்ததற்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளது.

நெட்டிசன்கள் விமர்சனம்

இந்த விவகாரத்தில் செரா மீதே பெரும்பாலும் தவறு இருப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர். செராவின் ஆடை குறித்து விமான நிலைய அதிகாரிகள் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், பொதுவெளியில் காதலர் மடியில் அமர்ந்தது தவறு என செராவை விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X