அந்த ஸ்டெப்புக்கு மட்டும் பல மணி நேரம் ரீடேக்.. புஷ்பா 2 சவாலாக இருந்தது.. ராஷ்மிகா மந்தனா!
சென்னை: அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து பாடல் டிரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளார். இப்படம் குறித்து பேசிய ராஷ்மிகா, 'Sooseki’ பாடலில் வரும் ஒரே ஸ்டெப்புக்காக இயக்குநர் பல டேக்குகளை எடுத்ததாக கூறியுள்ளார்.
டோலிவுட் பிரபலம் அல்லு அர்ஜுன், தென்னிந்திய குயின் ராஷ்மிகா மந்தனா, மிரட்டல் வில்லன் பகத் பாசில் என உச்சகட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் படம் வெளியான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது.

புஷ்பா 2: அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா2 படத்திலும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, படத்தின் எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
பல மணி நேரம் ரீ டேக்: இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியன் ஐடல் தெலுங்கு சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் புஷ்பா 2 வரும் 'Sooseki’ நடன ஸ்டெப்பை செய்து காட்டும் ரசிகர்கள் கேட்க இதை செய்து காட்டிய ராஷ்மிகா, அந்த பாடலை படமாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. கேமரா லென்ஸுடன் வரும் அந்த கை அசைவு காட்சிக்காக மட்டும் பல மணிநேரம் பல டேக்குகள் ஆனது என கூறியிருந்தார். ரசிகர்கள் ராஷ்மிகா பேசியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதெல்லாம் ஓவர்: சில நெட்டிசன்கள் இவ்வளவு சிறிய டான்ஸ் ஸ்டெப் இவ்வளவு நேரம் எடுத்தால், புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு இழுத்துக்கொண்டுத்தான் போகும். ஒரு சின்ன சின்ன விஷயத்திற்கு அதிக கவனம் செலுத்தி நேரத்தை இயக்குநர் வீணாக்குகிறார் என பலரும் அவரை விமர்சித்து வருகின்றன. தெலுங்கில் 'Sooseki’ என தொடங்கும் இப்பாடல், தமிழில் 'சூடான’ என தொடங்குகிறது. இப்பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தமிழில் பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார். இந்த பாடலில் ராஷ்மிகா ஆடும் அந்த ஸ்டேப் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











