பிரபல டிவி சீரியல் நடிகை புற்றுநோயால் மரணம்: திரையுலகம் இரங்கல்
Recommended Video

கொல்கத்தா: பிரபல தொலைக்காட்சி நடிகை ரீட்டா கொய்ரல் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளார்.
பெங்காலி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் ரீட்டா கொய்ரல்(58). பெரும்பாலும் வில்லியாகவே நடிப்பார். அபர்னா சென், ரித்துபர்னோ கோஷ், அஞ்சன் தத்தா உள்ளிட்ட பிரபல இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார்.
போரோ போ, குண்டா, ஜிபன் நியே கேலா, சிரோதினி துமி ஜே அமர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சிகிச்சை
ரீட்டாவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 3 மாதமாக புற்றுநோயுடன் போராடிய ரீட்டா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

நாடகம்
ராக்கி பந்தன், ஸ்த்ரீ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் ரீட்டா நடித்து வந்தார். இது தவிர அவர் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். பெங்காலி ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தவர்.
இரங்கல்
ரீட்டாவின் மரண செய்தி அறிந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ட்விட்டரில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அதற்குள் சென்றுவிட்டீர்களே என மமதா தெரிவித்துள்ளார்.
கவலை
பெங்காலி திரையுலகம் ஒரு நல்ல நடிகையை இழந்துவிட்டது. அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ரசிகர்களும், பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











