டாப்லெஸ் போஸ் கொடுத்த டிவி நடிகை...விமர்சித்தவர்கள் மீது ஆவேசம்

மும்பை : புகழ்பெற்ற டிவி நடிகையான திவ்யா அகர்வால் சமீபத்தில், மேலாடை இல்லாமல், பூங்கொத்தை வைத்து மறைத்தபடி, அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

அரை நிர்வாண கோலத்தில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. மிக மோசமான கருத்துக்கள் பதிவாகின.

என் உடையை நீங்கள் சொல்ல முடியாது

என் உடையை நீங்கள் சொல்ல முடியாது

இந்த கருத்துக்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, இன்ஸ்டாகிராமில் திவ்யா பேட்டியளித்தார். இதில், ஒரு கான்செப்ட்காக எடுத்த போட்டோவை வைத்து சிலர் பைத்தியக்காரத்தனமாக பேசி வருகின்றனர். இந்திய உடைகளா அல்லது ஆடைகளே இல்லாமல் இருக்க வேண்டுமா, நான் எந்த உடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் சொல்ல முடியாது.

பெரும் தலைவலி

பெரும் தலைவலி

ஒருவர் தோற்றத்தை வைத்து அவரது கேரக்டரை முடிவு செய்வது வருத்தம் அளிக்கிறது. உண்மையாக நான் அதை பற்றி அதிகம் யோசிக்கவே இல்லை. அதை பதிவிடவும் நான் அதிகம் யோசிக்கவில்லை.

ஆனால் அந்த போட்டோக்கள் ட்ரோல் செய்யப்படுவதும், நீங்கள் சொல்வதும் தான் பெரும் தலைவலியாக உள்ளது. இது எனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்காக நடத்தப்பட்ட போட்டோஷூட். ஒரு சோதனை முயற்சியாகவே இதை செய்தேன்.

உடம்பை காட்டுவது நோக்கமல்ல

உடம்பை காட்டுவது நோக்கமல்ல

2020 ல் நான் வீட்டிலேயே முடங்கி இருந்தது மிகவும் வேதனையளிக்கிறது. நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை செய்து பார்க்காத ஏதாவது ஒன்றை செய்ய நினைத்தேன்.

எனது உடம்பை காட்ட வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. இந்த கான்செப்ட்டை பார்த்தும் எனக்கு பிடித்திருந்தது. இதை முயற்சி செய்து பார்க்க விரும்பினேன். அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

பிரபலமாக செய்யவில்லை

பிரபலமாக செய்யவில்லை


நான் எதிலும் நடிக்கவில்லை. அதனால் என்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக தான் இது போன்று செய்கிறேன் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் தவறானது. இது போன்ற விஷயங்கள் ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இவை என்னை பாதிக்காது. ஆனால் வாழ்க்கையில் இது மிகவும் தவறான அணுகுமுறை என்பதை மட்டும் மக்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X