For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தொழிலதிபருடன் விபச்சாரம்... பிரபல நடிகை யமுனா கைது... 14 நாள் சிறையில் அடைப்பு!

  By Sudha
  |
  Actress Yamuna
  பெங்களூர்: பெங்களூரில் விபசார வழக்கில் தொழில் அதிபருடன் கைது செய்யப்பட்டார் பிரபல நடிகையான யமுனா. இவர் சமீபத்தில் வெளியான கண்டீரவா எனும் கன்னடப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நடிகை யமுனாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

  பிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான ரவிச்சந்திரன் நடித்த சின்னா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் யமுனா.

  பின்னர் மாவனிகே தக்க அளியா, ஹெண்டத்தியரே உஷார் படங்களில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இவர் நடித்து இருந்தார்.

  மேலும், மோடத மரேயல்லி என்ற படத்தில் நடித்தபோது யமுனா என்ற தனது பெயரை சவும்யா என்று மாற்றிக் கொண்டார். நடிகர் சிவராஜ்குமாருடனும் யமுனா நடித்துள்ளார். நேற்று திரைக்கு வந்த கண்டீரவா என்ற படத்தில், நடிகை யமுனா குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதுதவிர தமிழ் படங்களிலும் துணை நடிகையாகவும் யமுனா நடித்திருக்கிறார். தெலுங்கில் எர்றமந்தாரம், மவுன போராட்டம், மாமகாடு உள்பட பல படங்களிலும், தற்போது சீரியல்களிலும் யமுனா நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூர் விட்டல் மல்லையா ரோட்டில் உள்ள ஐடிசி 7 நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடைபெறுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினார்கள்.

  அப்போது நடிகை யமுனா, தகவல் தொழில் நுட்ப நிறுவனம் நடத்தி வரும் வேணுகோபால் என்பவருடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக பிடிபட்டார். இதையடுத்து, நடிகை யமுனா, வேணுகோபால், இதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் சுரக்ஷித் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

  ஓட்டலில் தங்க, அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட உள்ளதாக காரணம் தெரிவித்துிருந்தனர் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகையும் தொழிலதிபரும். ஓட்டலுக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.26 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.

  அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு 3 பேரும் நேற்று 1-வது பெங்களூர் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நடிகை யமுனாவையும், வேணுகோபாலையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி வெங்கடேஷ் குலகி உத்தரவிட்டார். மேலும் விபசார வழக்கு தொடர்பாக புரோக்கர் சுரக்ஷித்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் கேட்டு கொண்டதன் பெயரிலும், அவரை மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

  இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் பிதாரி கூறுகையில், "பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், லாட்ஜ்களில் உயர்மட்ட அளவில் விபசாரம் நடைபெறுவதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் ஈடுபடுபவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். அந்த கும்பலை பிடிக்க அனைத்து ஓட்டல்களிலும் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் நடிகை உள்பட 3 பேரும், மற்றொரு சோதனையில் 6 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விபசார புரோக்கர்கள் இன்டர்நெட், நவீன முறையின் மூலம் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் நெட்வொர்க்கை கண்டுபிடிப்போம்," என்றார்.

  English summary
  Yamuna, a well known actress who has acted in several Telugu, Tamil and Kannada movies like Mouna Poratam, Mamagaru and Puttinti Pattucheera has been arrested by Bangalore police when she was caught red-handed at a well known five-star hotel. A special Bangalore Task Force raided the ITC Royal Gardenia which is considered as one of the costliest hotel of Bangalore and South India at around 9.45 pm on Thursday night and arrested several people including actress Yamuna. Special officer Krishnam Raju and Assistant Commissioner of police Alok Kumar, arrested Yamuna, Venugopal, proprietor of a Bangalore based software firm and Surakshit, a person who brokered the deal between them.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more