மேடையில் பாடகரால் கண்ணீர் விட்டு கதறி அழுத டிடி.. பதறிப்போன ரசிகர்கள்!

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினி டிடி கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ இணையத்தில் காட்டுத்தீப்போல பரவி வருகிறது.

தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்வதிலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் திறமையானவர்.

விஜய் டிவியில், எத்தனையோ தொகுப்பாளினிகள் வந்தாலும், இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

popular anchor dhivayadharshini crying video trending on social media

தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி: காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இவர் இருந்துள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். வெள்ளித்திரை மாஸ்காட்டிய இவர் தற்போது சினிமாவில் ரவுண்டு கட்டி வருகிறார். அதர்வா, மணிகண்டன் நடித்த மத்தகம் தொடரில் இவர் முக்கியமான ஒரு நாளில் நடித்திருந்தார்.மேலும், ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

காலில் ஆப்ரேஷன்: ரியாலிட்டி ஷோ,கேம் ஷோக்களை தொகுத்து வழங்கிய டிடி தற்போது முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்குகிறார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால், அவர் முக்கியமான நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்குகிறார்.

popular anchor dhivayadharshini crying video trending on social media

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9: இந்நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்த சீசனில் ஸ்ரீநிதா டைட்டில் வின்னர் ஆனார். இவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கதறி அழுத டிடி: இந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியான டிடி, சூப்பர் சிங்கர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். அப்போது, பாடகர் பிரதீப் குமார், ஜெய் பீம் படத்தில் வரும் தல கோதும் என்ற பாடலை பாடினார். மிகவும் உருக்கமான இந்த பாடலை கேட்ட டிடி உணர்ச்சிமிகுதியால் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிடியின் அந்த ரியாக்ஷனை நெட்டிசன்கள் சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X