முருகதாஸ் படத்தில் விஜய்க்கு வில்லன் கிடைச்சாச்சு

By Siva

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல பெங்காலி நடிகர் டோட்டா ராய் சவுத்ரி நடிக்கிறார்.

துப்பாக்கி பட வெற்றியை அடுத்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், விஜய் மீண்டும் சேர்ந்து பணியாற்ற நினைத்தனர். அதன்படி தற்போது அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது.

படத்தின் துவக்கமாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்கினர்.

வில்லன்

வில்லன்

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல பெங்காலி நடிகரான டோட்டா ராய் சவுத்ரி நடிக்கிறார். படத்தில் அவர் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாம்.

சண்டை

சண்டை

கொல்கத்தாவில் டோட்டா மற்றும் விஜய் இடையேயான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. கொல்கத்தாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.

சென்னை ஏர்போர்ட்

சென்னை ஏர்போர்ட்

விஜய் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்தில் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்கள்.

சமந்தா

சமந்தா

கொல்கத்தாவில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதால் நாயகி சமந்தா அங்கு செல்லவில்லை. அவர் தற்போது சென்னையில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

ஆந்திரா

ஆந்திரா

சென்னையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு ஆந்திர மாநிலத்திற்கு செல்கிறது. அங்கு ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

அனிருத்

அனிருத்

விஜய் படத்திற்கு முதல்முறையாக அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அவர் விஜய்யை ஒரு பாடலாவது பாட வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X