பாலியல் தொல்லை.. மதம் மாறும் படி கட்டாயப்படுத்தினார்.. ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் புகார்!
சென்னை: தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இடம் பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்கு தேசிய விருதை வென்ற பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணை மதம் மாறும் படி கட்டாயப்படுத்தியதாகவும் தெரிகிறது.
தெலுங்கில் பல வெற்றிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்த ஷேக் ஜானி பாஷா என்கிற ஜானி மாஸ்டர். நடிகர் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு அனைவரும் அசந்து போகும் அளவிற்கு ஸ்டெப்ஸ் போட்டு இருந்தார். அந்த பாடலின் நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஜானி மாஸ்டரின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

ஜானி மாஸ்டர்: இந்த படத்தைத் தொடர்ந்து அரபிக் குத்து, ஜாலி ஓ ஜிம்கானா, ரஞ்சிதமே, காவலையா உள்ளிட்ட பல பிரபல தமிழ் பாடல்களுக்கும் நடனம் அமைத்தார் ஜானி மாஸ்டர். இவர், தனுஷ், நித்யாமேனன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா’ பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.
21 வயது இளம் பெண் புகார்: இந்நிலையில், ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் நடனக்கலைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். ஜானி மாஸ்டர் நடனக்குழுவில் பெண் நடனக் கலைஞராக இருந்த அந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியாக நடன இயக்குநராக படத்திற்கு நடனம் அமைத்து வருகிறார். 21 வயதான அவர் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹைதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற போது, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்ததாகவும்.
பாலியல் புகார்: மேலும், நரசிங்கியில் உள்ள அவரது வீட்டில் நான் தங்கிய போது, அவர் என்னை பல முறை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 376, பிரிவு 506, பிரிவு 323 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜானி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில பெண்கள் பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி ஷிகா கோயல், தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதம் மாற கட்டாயப்படுத்தினார்: ஜானி மாஸ்டர் பாலியல் துன்புறுத்தியது மட்டுமில்லாமல், தன்னை வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதை அடுத்து இந்த வழக்கு வேறு ஒரு கோணத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜானி மாஸ்டர் ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகார் காரணமாக 6 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











