நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள் !

சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 43.

Popular comedian and dancer Dhanasekaran Died

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பள்ளிநாயக்கம் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன் . இவர் சினிமாவில் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனசேகரன் குள்ளமாக இருந்ததால் இவரால் சினிமாவில் பெரிதாக வரமுடியவில்லை. ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த படத்தின் நகைச்சுவை சிறப்பாக இருக்கும்.

இவர் நடிகராக மட்டும் இல்லாமல் நடனக்கலைஞரும் ஆவர். இவர் பல நடனக்குழுக்களுடன் இணைந்து பல நடன நிகழ்ச்சியிலும் நடனமாடி உள்ளார். நேற்று முன் தினம், திருச்செங்கோடு கோவில் திருவிழாவில் நடனமாடி உள்ளார். விழாவில் சிறப்பாக நடனமாடிய இவர் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்துள்ளார்.

Popular comedian and dancer Dhanasekaran Died

இந்நிலையில், தனசேகரன் எந்த அசைவும் இன்றி படுத்து இருந்ததை பார்த்த உறவினர்கள் மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மருத்துவர் வந்து மேற்கொண்ட பரிசோதனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இரவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தனசேகரனின் மறைவு திரைத்துறை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் இன்று நடைபெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X