பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு மரணம்!

'பைவ்ஸ்டார்', 'தூள்', 'சிவகாசி', 'திண்டுக்கல் சாரதி', தில்லாலங்கிடி, 'மாப்பிள்ளை' உள்பட பல படங்களில் நடித்தவர் சிட்டிபாபு.
சிட்டிபாபுவுக்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்தது. இதற்காக அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் படங்களில் நடிக்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
சமீபத்தில்தான் அவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த இரு தினங்களாக தீவிர சிகிச்சையில் இருந்த சிட்டிபாபு, இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யூ., பிரிவில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (8.11.2013) சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
நடிகர் சிட்டிபாபுவுக்கு 49 வயது. ஜரினா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











