சாமியாராக மாறிய பிரபல காமெடி நடிகரின் ஒரே மகன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
மறைந்த காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனின் மகன் சாமியாராக இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை: மறைந்த பிரபல காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனின் ஒரே மகன் சாமியாராக இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தன் ஒல்லியான தேகத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவரது ஒரே மகன் காமேஷ்வரா. தற்போது இவர் சுவாமிஜி ஓம் காமேஷ்வரா என சாமியாராக இருந்து வருகிறார்.

சித்தர்கள், சாய் பாபா, இயேசுவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவர், மக்களவைத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என ஆருடம் கூறி பலரையும் அதிர்ச்சி அடைய வைக்கிறார்.
சென்னை திருவல்லிக்கேணியில் தற்போது வசித்து வரும் இவர், மாதத்தில் பாதி நாள் மலேசியாவில் கழித்து வருகிறார். காரணம் அங்கு தான் அவரது குடும்பம் உள்ளது.
காமெடிக்கு பேர் போன ஓமக்குச்சி நரசிம்மனின் குடும்பத்தில் இருந்து அதே போல் நடிகர் ஒருவர் வருவார் என எதிர்பார்த்தவர்களுக்கு, காமேஷ்வரா சாமியாராகி அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஓமக்குச்சி நரசிம்மனுக்கு திருமணமாகி 12 வருடங்கள் கழித்து பிறந்தவர் காமேஷ்வரா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











