For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தளபதி விஜய்க்கு பிடித்த காஸ்ட்யூம் எது தெரியுமா? ரகசியத்தை ஓப்பன் பண்ண பிரபல காஸ்ட்யூம் டிசைனர்!

  |

  சென்னை: தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த காஸ்ட்யூம் எதுவென ஆடை வடிவமைப்பாளர் கோமல் ஷஹானி தெரிவித்துள்ளார்.

  பாரம்பரிய உடை முதல் வெஸ்டர்ன் காஸ்ட்யூம் என பல விதமான உடைகளை உடுத்தி ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் விஜய்.

  எந்த உடை போட்டாலும், அவருக்கு அப்படியே பொருந்தி விடும் அளவுக்கு அவரது உடலை எப்போதுமே ஃபிட்டாக வைத்திருப்பதில் மிகவும் கவனம் உடையவர் அவர்.

  ரொம்ப முக்கியம்

  ரொம்ப முக்கியம்

  சினிமா பிரபலங்களுக்கு அழகு எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட அதிகமாக அவர்கள் உடுத்தும் உடையும் முக்கியம். ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப, சினிமா பிரபலங்களின் கவர்ச்சிகரமான உடைகளை வடிவமைக்க ஒவ்வொரு படத்திற்கும் ஸ்பெஷல் காஸ்ட்யூம் டிசைனர்களையும் களமிறக்கி வருகின்றனர்.

  ஆடை வடிவமைப்பாளர்

  ஆடை வடிவமைப்பாளர்

  இந்தியாவின் முன்னணி நடிகர்களான அக்‌ஷய் குமார், விஜய், பிரியங்கா சோப்ரா, சித்தார்த், ப்ரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, காஜல் அகர்வால், அசின், ஆயிஷா டாக்கியா, குல் பனாக் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்து வருகிறார் கோமல் ஷஹானி.

  விஜய்யுடன்

  விஜய்யுடன்

  ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்த கோமல் ஷஹானி, நடிகர் விஜய்க்கு எந்த காஸ்ட்யூம் ரொம்ப பிடிக்கும் என்ற ரகசியத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறார்.

  ஸ்டைல்

  ஸ்டைல்

  சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து, தமிழ் சினிமாவில் ஸ்டைல் ஐகானாக வலம் வருவது தளபதி விஜய் தான். 46 வயதிலும், இன்னமும் இளமை மாறாமல் வெறித்தனமாக நடனமாடுவதில் மாஸ்டராக திகழ்ந்து வருகிறார். சாதாரண சட்டை அணிந்தாலும், அவருக்கு சூப்பராகவே இருக்கும், இந்நிலையில், விஜய்க்கு பிடித்த காஸ்ட்யூம் குறித்த ரகசியம் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் அவரது ட்வீட்டை வைரலாக்கி வருகின்றனர்.

  ஏகப்பட்ட ஷேட்ஸ்

  ஏகப்பட்ட ஷேட்ஸ்

  பிகில் படத்தில், அப்பா ராயப்பன், கால் பந்தாட்ட வீரர் பிகில், ரவுடி மைக்கேல், கோச் மைக்கேல் என திரைக்கதையில் விஜய்யின் கதாபாத்திர ஷேடில் பல வித்தியாசங்களை இயக்குநர் அட்லி உருவாக்கி இருப்பார். அத்தனைக்கும், தனது ஆடை வடிவமைப்பு திறன் மூலமாகவே நடிகர் விஜய்யை அந்த அந்த சூழலுக்கு ஏற்ப மாற்றி காட்டியிருப்பார் கோமல்.

  என்ன உடை

  என்ன உடை

  அவற்றுள் நடிகர் விஜய்க்கு கோச் மைக்கேல் அணிந்திருக்கும் அந்த கோட் சூட் தான் பிடித்த உடை என்பதை தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் கோமல். பிரியமானவளே படத்தில் இருந்தே நடிகர் விஜய்க்கு கோட் சூட் மீது தீராத காதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  நண்பர் அஜித்

  நண்பர் அஜித்

  மேலும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்து கெத்துக் காட்டினார். விழாவுக்கு நண்பர் அஜித் போல கோட் சூட்டில் வரலாம் என நினைத்தேன், எனக்கு சூட் சூட்டாகுதா என்றும் கேட்டு, அரங்கத்தையே விஜய் அதிரவைத்ததை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

  ஆசையா இருக்கு

  ஆசையா இருக்கு

  மேலும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் கோமல் ஷஹானி, தளபதி விஜய்யின் பிகில் படத்தில் வேலை செய்ததில் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஆசையா இருக்கு, விரைவில் அதற்கான வாய்ப்பு உருவாகும் என்று பதிவிட்டு இருக்கிறார். அவரது ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், பிகில் படத்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் தளபதியை வேற லெவலில் செதுக்கி இருக்கீங்க, நன்றி என வாழ்த்தி வருகின்றனர்.

  English summary
  Popular celebrity stylist Komal Shahani had opened up on Thalapathy Vijay's favourite costume since she had worked closely with the actor. Read on to know more.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X