ராமரை அசிங்கப்படுத்தினாரு.. இப்போ கிருஷ்ணரையும் விட்டு வைக்கல.. பிரபாஸை விளாசிய பிரபலம்!

மும்பை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் கல்கி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அமிதாபச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். நடிகர் பிரபாஸ் கடவுள் கிருஷ்ணரையும் இழிவுபடுத்தி வருகிறார் என விமர்சகர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு பாகங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ்.

Popular Critic KRK says Prabhas eating meat on Kalki sets while acted in Lord Vishnu avatar

500 கோடி பட்ஜெட் படங்கள்: பிரபாஸை வைத்து இயக்க வேண்டுமென்றால் குறைந்தது 500 கோடி பட்ஜெட் ஆவது இருக்க வேண்டும் என்கிற நிலைமை உருவாகியுள்ளது. ஆனால், பாகுபலி 2 படத்தை தவிர பிரபாஸ் நடித்த எந்த ஒரு படமும் ஆயிரம் கோடி வசூலை தொடவில்லை என்பது தனிக்கதை. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சலார் திரைப்படம் 700 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக தகவல்கள் வெளியாகின.

Popular Critic KRK says Prabhas eating meat on Kalki sets while acted in Lord Vishnu avatar

ராமரை அவமதித்த பிரபாஸ்: கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் ராமர் மற்றும் ராமாயணத்தை கிண்டல் செய்து உருவாக்கப்பட்ட படம் என விமர்சிக்கப்பட்டு பாலிவுட் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது. அதன் காரணமாகவே ரன்பீர் கபூர் நடிப்பில் இன்னொரு ராமாயணம் திரைப்படம் உருவாக உள்ளது. அந்தப்படத்தில் சாய் பல்லவி சீதாவாக நடிக்கவுள்ளார். ராமராக பிரபாஸின் தோற்றம் தொடங்கி ராவணனாக நடித்த சைஃப் அலி கான் கதாபாத்திரம் வரை ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.

Popular Critic KRK says Prabhas eating meat on Kalki sets while acted in Lord Vishnu avatar

அசைவம் சாப்பிட்டு கல்கி படத்தில்: இந்நிலையில், அடுத்து பிரபாஸ் நடித்து வரும் கல்கி படம் விஷ்ணு பகவானின் 10-ஆவது அவதாரம். இந்த நிலையில், அசைவம் சாப்பிட்டுவிட்டு நடிகர் பிரபாஸ் படப்பிடிப்பில் நடித்து வருவதாக பிரபல பாலிவுட் விமர்சகர் கே ஆர் கே தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அன்னபூரணி சர்ச்சை: நயன்தாரா நடித்து வெளியான அன்னபூரணி திரைப்படத்திலும் ராமர் அசைவப் பிரியர் போன்ற வசனங்கள் இடம்பெற்றது தான் அந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்தே நீக்குவதற்கான காரணமாக மாறியது என்றும் பிரபாஸ் தற்போது எந்தவொரு விரதமும் இருக்காமல் நான் வெஜ் உட்கொண்டு எப்படி கல்கி படத்தில் நடிக்கலாம் என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X