சிவாஜியை வைத்து மட்டும் 14 படங்கள் இயக்கிய சி.வி. ராஜேந்திரன் மரணம்

By Siva

சென்னை: பிரபல இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று உயிர் இழந்தார்.

பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி. ராஜேந்திரன். ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் 1967ம் ஆண்டில் வெளியான அனுபவம் புதுமை என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார்.

Popular Director CV Rajendran no more

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களை இயக்கியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து மட்டும் 14 படங்களை இயக்கியுள்ளார் ராஜேந்திரன்.

சிவாஜி, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தை தயாரித்தவர் ராஜேந்திரன். சென்னையில் வசித்து வந்த ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

வெளிநாட்டில் வசிக்கும் அவரின் பிள்ளைகள் வந்ததும் வரும் புதன்கிழமை அவரின் இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் மறைவு குறித்து அறிந்த திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X