அனுஷ்காவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற அருந்ததி பட இயக்குநர் மரணம்
ஹைதராபாத்: சுமார் 100 படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இன்று காலமானார்.
பிரபல தெலுங்கு இயக்குநரான கோடி ராமகிருஷ்ணாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றால் அவதிப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வரவழைக்கப்பட்டு அவரை கண்காணித்தனர்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரின் மரண செய்தி அறிந்த தெலுங்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
1982ம் ஆண்டு டோலிவுட் வந்த அவர் சுமார் 100 படங்களை இயக்கியுள்ளார். அனுஷ்காவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்த அருந்ததி படத்தை இயக்கியவர் கோடி ராமகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
கோடி ராமகிருஷ்ணா படங்களை இயக்கியதோடு வெற்றிகரமான நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர்.


Click it and Unblock the Notifications











