twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்ன வயதில் ஹீரோ சான்ஸை மறுத்த இயக்குநர் ராஜீவ்மேனன்: வெற்றிமாறனின் விடுதலை படத்தில் புதிய அவதாரம்

    |

    சென்னை: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    Recommended Video

    Viduthalai | தவிப்பில் Soori,Vijaysethupathi-யால் தான் படம் தள்ளிபோகுதா?

    விஜய் சேதுபதி, சூரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    விடுதலை படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் முக்கியமான பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

    விடுதலை ரிலீசிற்கு இப்படி ஒரு பிளானா?...வெற்றிமாறன் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்? விடுதலை ரிலீசிற்கு இப்படி ஒரு பிளானா?...வெற்றிமாறன் ஏன் இந்த முடிவுக்கு வந்தார்?

    இரண்டு பாகங்களாக விடுதலை

    இரண்டு பாகங்களாக விடுதலை

    தனுஷ் நடிப்பில் வெளியான அசுரனுக்கு பின்னர், வெற்றிமாறன் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இளையராஜா இசையமைக்கும் விடுதலை, இரண்டு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

    இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்

    இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்

    சத்தியமங்கலம் வனப்பகுதி, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, சென்னை ஆகிய பகுதிகளில் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 90% படப்பிடிப்பு இதுவரை முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்காக மிகப் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை பீட்டர் ஹெய்ன் இயக்கியுள்ளார். விடுதலை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ஓடிடியில் வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    விடுதலையில் இணைந்த பிரபலம்

    விடுதலையில் இணைந்த பிரபலம்

    இந்நிலையில், விடுதலை படத்தில் பிரபல இயக்குநர் ராஜீவ் மேனன் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனனின் மகனான ராஜீவ் மேனன், அதிகமான விளம்பர படங்களை இயக்கியுள்ளார். அதேபோல், மணிரத்னம் இயக்கிய பம்பாய், குரு, கடல் உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

    அரசியல் பேசிய சர்வம் தாள மயம்

    அரசியல் பேசிய சர்வம் தாள மயம்

    மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என காதல் திரைப்படங்களாக இயக்கிய ராஜீவ் மேனன், சர்வம் தாள மயம் படத்தில் இசையை பின்னணியாக வைத்து வர்க்க அரசியல் குறித்து பேசியிருந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ்குமார். அவருடைய அப்பா குமரவேலுடன் சேர்ந்து மிருதங்கம் தயாரிக்கும் வேலையைப் பார்ப்பவர். பிரபல மிருதங்க வித்வான் நெடுமுடி வேணுவிடம் பல போராட்டங்களுக்குப் பிறகு மிருதங்கம் கற்கச் செல்லும் ஜிவி பிரகாஷ். வர்க்க அரசியல் காரணமாக விரட்டியடிக்கப்படுகிறார். இறுதியாக ஜிவி மிருதங்க வித்வானாக ஆனாரா, இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

    இரண்டாவது முறை நடிகனாக

    இரண்டாவது முறை நடிகனாக

    ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த ‘சர்வம் தாள மயம்' ஜிவி பிரகாஷ் நடிப்பில் சிறந்த படம் என ரசிகர்கள் புகழ்ந்தனர். அதேபோல், ராஜீவ் மேனனும் தனது கோணத்தில் வர்க்க அரசியல் குறித்தும், கலை என்பது குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் சொந்தமில்லை என்று பேசியிருந்தார். இந்நிலையில், ராஜீவ் மேனன் தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். சிறுவயதில் ஹீரோவாக நடிக்க பல வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்தவர் ராஜீவ் மேனன். 1998ல் மலையாளத்தில் வெளியான ‘ஹரிகிருஷ்ணன்ஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு இரண்டாவது முறையாக விடுதலை படத்தில் ராஜீவ் மேனன் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Rajeev Menon has directed the Minsara Kanavu, Kandukondain Kandukondain, and Sarvam Thala Mayam films in Tamil. Rajeev Menon is working as a director and cinematographer, now he has played an important role in Vetrimaaran's Viduthalai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X