வரதட்சணை கொடுமை.. கள்ளத் தொடர்பு.. டார்ச்சர்.. மனைவி தந்த புகார்.. பிரபல கானா பாடகர் மகன் கைது!

பிரபல கானா பாடகர் பழனியின் மகன், வரதட்சணை கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடி உதை.. கானா பாடகரின் மகன் கைது!

சென்னை: மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய வழக்கில் பிரபல கானா பாடகரின் மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் கானா பாடகர் பழனி. இவர் பல தமிழ் படங்களில் கானா பாடல்கள் பாடியுள்ளார். இவருடைய மகன் தரணி.

Popular gana singer Pazhanis son arrested on dowry case, illegal affair

34 வயதாகும் தரணி, 22 வயதாகும் விஜய பானு எனும் பெண்ணை கடந்த ஆறு வருடமாக காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த ஜூலை மாதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு தான் தரணியின் உண்மையான முகம் பானுவிற்கு தெரியவந்திருக்கிறது.

வேலைக்கு போகாமல் வெட்டியாய் ஊர் சுற்றி வந்த தரணி, திருமணமான சில தினங்களிலேயே பானுவின் 20 சவரன் தங்க நகைகளை அடகு வைத்து செலவு செய்துவிட்டார். அத்துடன் நிறுத்தாமல், பானுவை துன்புறுத்தி அவரது பெற்றோர் வீட்டிற்கு போய் இன்னும் பணம் வாங்கி வரும்படி டார்ச்சர் செய்திருக்கிறார்.

மேலும் தரணி, வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவரது செல்போனில் இருந்துள்ளது. அது பற்றி பானு கேட்டதால் ஆத்திரமடைந்த தரணி, அவரை அடித்து உதைத்து துன்புறுத்தியிருக்கிறார்.

இதையடுத்து, தரணி மற்றும் அவரது தாய் மீது பானு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, தரணிக்கு அவருடன் 10 வயது மூத்த பெண் நித்யா என்பவருடன் ஏற்கனவே கள்ளத் தொடர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது. நித்யா ஏற்கனவே திருமணமாகி கணவனை பிரிந்தவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இருந்த நிலையில், தரணி மூலம் மேலும் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வரதட்சணை கொடுமை,மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தரணி, அவரது தாய் ராஜேஸ்வரி, சகோதரி பரணி ஆகியோரை கைது செய்தனர். பாடகர் பழனி மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

More from Filmibeat

Read more about: singer dowry case
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X