அஷ்வினின் முதல் பட டைட்டிலை வெளியிடும் பிரபல ஹீரோ... எப்போ தெரியுமா ?

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் உலக பாப்புலர் ஆகி விட்டார் அஷ்வின். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகம். இந்த நிகழ்ச்சியில் அஷ்வின் - சிவாங்கி இடையேயான கெமிஸ்ட்ரிக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.

POPULAR HERO TO UNVEIL ASHWIN DEBUT FILMS TITLE LOOK

குட்டி பட்டாஸ் பாடல் வெளிவந்து, யூட்யூப்பில் சாதனை படைக்கும் அளவிற்கு ஹிட்டாகி உள்ளது. இதனால் இளைஞர்கள் மத்தியில் அஷ்வின் மிக பிரபலமாகி விட்டார். சமீப நாட்களாக இவர் வெளியிடும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உலகிற்கு அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு முன்பாக சில படங்களில் சிறிய வேடங்களில் அஷ்வின் நடித்துள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் மணி ரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி சீரியலின் ஹீரோவாக நடித்துள்ளார்.

டிரைடன்ட் ஆர்ட் தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க அஷ்வின் ஒப்பந்தமாகி உள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக்கை, பிரபல ஹீரோவான ஆர்யா வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

POPULAR HERO TO UNVEIL ASHWIN DEBUT FILMS TITLE LOOK

தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் 7 வது படைப்பாக குக் வித் கோமாளி அஷ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 7 மணிக்கு ஆர்யா வெளியிட உள்ளார் என ட்விட்டர் பக்கத்தில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X