முட்டியில் கிழிந்த பேன்ட்.. கும்முன்னு டி சர்ட்டில்.. ஜம்முன்னு ரைடு விட்ட மம்தா.. 15 வருஷமாச்சாம்!
மனாமா : மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் திறமையான நடிகையாக இருப்பவர் மம்தா மோகன்தாஸ். மை பாஸ், டூ கன்ட்ரீஸ் போன்ற படங்களில் திலீப்புடன் இணைந்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டுக்களை அள்ளியவர் மம்தா.

தமிழில், எனிமி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். இது விஷாலின் 30 வது படம். ஆர்யாவிற்கு இது 32 வது படம். மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மிர்னாளினி ரவி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில், ஹர்லே டேவிட்சன் பைக்கை ஒட்டி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மம்தா. தற்போது பஹ்ரைனில் இருக்கும் மம்தா, அங்குள்ள சாலையில் தான் பைக் ஓட்டி, மிரட்டி உள்ளார்.
இந்த வீடியோவுடன் மம்தா பதிவிட்டுள்ள கேப்ஷனில், உங்களிடம் பைக் இருந்தால், அதை ஒட்டுவதற்கு நீங்கள் யாருக்காக காத்திருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பிறகு ஓட்டுகிறேன். இதில் மிக முக்கியமான ஆச்சரியம் என்னவென்றால், 15 ஆண்டுகள் ஆகியும் டச் விட வில்லை.
படங்களில் நடக்க துவங்கியதால் பைக் ஓட்ட முடியாமல் போனது. பெங்களூருவில் இருந்த நாட்களில் நகரம் முழுவதும் ஃப்ரீயாக பைக்கில் சுற்றுவேன் என பதிவிட்டுள்ளார். மம்தா பதிவிட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதற்கு லைக் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











