முகம், கண் எல்லாம் வீங்கி போச்சே.. அய்யோ பாவம் என்னாச்சு.. உர்ஃபி ஜாவேத்தை நலம் விசாரிக்கும் பேன்ஸ்!

சென்னை: அரைகுறை ஆடையுடன் விவகாரமாக வலம் வரும் நடிகை உர்ஃபி ஜாவேத். பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தான் பெற்றோரால் கஷ்டப்பட்டது குறித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகம் வீங்கி இருக்கும் போட்டோவை பகிர்ந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

Voot ஒடிடி தளத்தில் பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சி கலந்து கொண்ட உர்ஃபி, அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டார். ஆனால், அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை தவறாக பயன்படுத்தி படுமோசமான உடையை அணிந்து கவர்ச்சி தாண்டவம் ஆடி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், வெறும் ஸ்மார்ட் போன்களை தொங்க விட்டப்படியும், இரு மார்புக்கு மட்டுமே சின்னதாக ஆடை அணிந்தும், டிரெஸ்ஸே போடாமல் ஒயின் கிளாஸ்களை கொண்டு முன்னழகை மறைத்தும் பல விதமான கவர்ச்சி உடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை இஷ்டத்துக்கு அதிகரித்து வருகிறார்.

urfi javed instagram

ஆபாச நடிகையா: அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நான் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, என் புகைப்படத்தை மார்ஃப் செய்து ஆபாச வெப்சைட்களில் சிலர் பதிவிட்டனர். அதனை பார்த்த என் குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் என் மீது சந்தேகப்பட்டனர். தற்போது என் சொந்தக்காரர்களும் என்னை ஆபாச நடிகையாகத்தான் பார்க்கின்றனர். சிலர் இன்னமும் தன்னை Porn Star என்றே அழைக்கிறார்கள் என்று தனது வேதனையுடன் பேசி இருந்தார்.

அய்யோ என்னாச்சு: கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வரும் உர்ஃபி ஜாவேத், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகம், உதடு கண் வீங்கி இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பலர் என்ன ஆச்சு என்றும், அவர் தொடர்ந்து மேக்கப் போடுவதால் ஏதாவது பாதிப்பு இருக்கும் என்று கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், இதுகுறித்து பேசி உள்ள உர்ஃபி ஜாவேத், என் முகம் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை பேசி வருகின்றனர். இது தனக்கு அவ்வப்போது இயல்பாக ஏற்படும் அலர்ஜிகள். 18 வயது முதலிலேயே தனது முகத்தில் பிற அழகு சாதன விஷயங்களை பயன்படுத்தி வருவதால், அவ்வப்போது இது போன்ற முக வீக்கங்கள் ஏற்படும் என்று கவலையோடு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X