ஹிஜாப் விவகாரம்… நீதிபதி குறித்து மோசமான கருத்து… பிரபல நடிகர் கைது !
பெங்களுர் : ஹிஜாப் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்தை தெரிவித்த பிரபல கன்னட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களுரில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹிஜாப் விவகாரம் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் மற்றும் காஜி ஜெய்புன்னிசா மொகிதீன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூக ஆர்வலரான கன்னட நடிகர் சேத்தன் குமார் ஹிஜாப் விவகாரத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த 16-ந் தேதி தனது ட்விட்டரில், ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் கூறியது பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்டு இருந்தார். நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது தற்போது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி சேத்தன்குமாருக்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரிவு காவல்துறை துணை ஆணையர் அனுசேத், உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைப் பற்றி சேத்தன் குமார் மிகவும் ஆத்திரமூட்டும் வகையில் ட்வீட் செய்துள்ளார். இதை அறிந்த போலீசார், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். பகை மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் அவர் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேத்தனின் மனைவி மேகா ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரிவில்லை. மேலும் அவரின் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது கைது செய்யப்பட்டது போல கடத்தப்பட்டது போல இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சேத்தன் குமார் கைது தொடர்பாக விளக்கம் கேட்டு சேஷாத்ரிபுரம் காவல் நிலையம் மற்றும் பெங்களூரு காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











