கார் விபத்தில் பிரபல நடிகர்கள் தர்ஷன், தேவராஜ், பிரஜ்வல் காயம்

By Siva

Recommended Video

3 பிரபல நடிகர்கள் கார் விபத்தில் சிக்கி படுகாயம்- வீடியோ

மைசூர்: மைசூர் அருகே இன்று அதிகாலை நடந்த கார் விபத்தில் கன்னட நடிகர்கள் தர்ஷன், தேவ்ராஜ், அவரின் மகன் பிரஜ்வல் மற்றும் ஒருவர் காயம் அடைந்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகரான தர்ஷன் மூத்த நடிகரான தேவ்ராஜ், அவரின் மகன் பிரஜ்வல் மற்றும் ஒருவருடன் காரில் மைசூர் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த விழாவில் அவர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு அவர்கள் காரில் பெங்களூருவுக்கு கிளம்பினர்.

காயம்

காயம்

கார் ஹின்கல் ரிங் ரோடு அருகே சென்ற போது டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து கார் ஸ்கிட் ஆகி, கட்டுப்பாட்டை இழந்து ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த தர்ஷன், தேவராஜ் உள்ளிட்ட நான்கு பேருமே காயம் அடைந்தனர். இதில் தர்ஷனின் கை எலும்பு முறிந்தது. தேவராஜுக்கு நெஞ்சில் அடிபட்டது.

தர்ஷன்

தர்ஷன்

பிரஜ்வல் மற்றும் ஒருவருக்கு கழுத்தில் அடிபட்டது. காயம் அடைந்த அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தர்ஷனுக்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வேதராஜுக்கு பிரபல மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து வருகிறது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மனைவி

மனைவி

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தர்ஷன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் அறிந்து அவரின் அம்மா மீனா, மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரை சந்தித்தனர். காயம் அடைந்த 4 பேரில் மூன்று பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

காயம் அடைந்த நான்கு பேரின் உயிருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தர்ஷன் காயம் அடைந்த தகவல் அறிந்த அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். தர்ஷன், தேவ்ராஜ் உள்ளிட்டோரின் உடல்நிலை குறித்த அனைத்து தகவல்களையும் மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X