பிரபல திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த் காலமானார்...பிரபலங்கள் இரங்கல்
சென்னை : பிரபல திரைப்பட பாடலாரியிர் லலிதானந்த் உடல்நிலை குறைவால் இன்று மதியம் 3:35 மணிக்கு காலமானார். இவரின் மனைவி முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லலிதானந்த் உடனான நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் "என் வீட்டுல நான் இருந்தேனே எதிர் வீட்டுல அவ இருந்தாளே" என்ற பாடலின் மூலம் பிரபலமானவர் லலிதானந்த். அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி தமிழ் சினிமா உலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர்.

இவர், கோகுல் இயக்கத்தில் ரௌத்திரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம்,கார்த்தி நடிப்பில் காஸ்மோரா, விஜய்சேதுபதி நடித்த ஜூங்கா, சேரனின் இயக்கத்தில் திருமணம், அன்பிற்கினியாள், போன்ற படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இவரது பாடல் வரிகளில் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் உட்பட இன்னும் சில படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.
லெமூரியாவில் இருந்த காதலி வீடு, ஒரு எலுமிச்சையின் வரலாறு, என்ற இரு கவிதை தொகுப்புகளையும் லலித்குமார் வெளியிட்டுள்ளார். இவர் வசன கர்த்தாவாகவும் பல படங்களில் பணியாற்றி உள்ளார். 47 வயதாகும் லலிதானந்த், கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வயதிலேயே திரை பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் ,ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லலிதானந்த் எழுதி பாடல்களை குறிப்பிட்டு பலர் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர். லலிதானந்த்தின் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி, இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











