Mamukkoya no more : பழம் பெரும் நடிகர் மாமுக்கோயா மறைவு… பிரபலங்கள் இரங்கல்!
கோழிக்கோடு : பழம்பெரும் மூத்த மலையாள நடிகர் மாமுக்கோயா இன்று காலமானார். அவருக்கு வயது 76.
தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
450 படங்களில் : பழம்பெரும் நடிகரான மாமுக்கோயா நாடக கலைஞராக தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து,1979ம் ஆண்டு நீலாம்பூர் பாலன் இயக்கி வெளிவந்த அன்யாருடே பூமி என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த மாமுக்கோயா சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்று உயிரிழந்தார் : இவர் கடந்த 24ந் தேதி மலப்புரத்தில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தர். இதையடுத்து, வான்டூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுட ன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள முதல்வர் இரங்கல் : ஐந்து தசாப்தங்களாக 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்வை நடிகராக நடித்து புகழ்பெற்ற நடிகர் மாமுக்கோயா மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆரிப் முகமது கான், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடும்பத்திற்கு இரங்கல் : இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மலையாள நடிகர் மம்முட்டி, மாமுக்கோயாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார். மாமுக்கோயாவின் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

பிருத்விராஜ் இரங்கல் : 2021 ஆம் ஆண்டு வெளியான குருதி படத்தில் மாமுக்கோயாவுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்ட பிருத்விராஜ் சுகுமாரன் இன்ஸ்டாகிராமில், "அமைதியாக இருங்கள் மாமுக்கோயா சார்! உங்களுடன் பலமுறை திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நான் பெற்றேன். ஆனால், இவ்வளவு நெருக்கத்தில் மூசா, குருதி படங்களில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார். இவரது மறைவிக்கு நடிகை மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











