போலீஸ் வாகனம் என்ற ஸ்டிக்கர்.. காரில் மதுக்கடத்தல்.. பிரபல தயாரிப்பாளர் கைது.. பூந்தமல்லி ஷாக்!

சென்னை: பூந்தமல்லி அருகே சொகுசு கார் ஒன்றில் போலீஸ் வாகனம் என்ற ஸ்டிக்கர் ஒட்டியபடி சென்ற காரை பறிசோதனை செய்ததில் மதுபாட்டில்களுடன் தயாரிப்பாளர் ஒருவர் கைதாகி உள்ளார்.

நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் நூற்றுக்கும் அதிகமான மதுப்பாட்டில்கள் அண்மையில் கைப்பற்றப்பட்டு கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் காரில் மதுக்கடத்தி சிக்கி உள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டோட்டல் லாக்டவுன்

டோட்டல் லாக்டவுன்

தமிழகத்தில் வரும் ஜூலை 31ம் தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் ஜூலை 5ம் தேதி வரை டோட்டல் லாக்டவுன் போடப்பட்டிருக்கிறது. மது விற்பனை உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் பெயரில் மோசடி

போலீஸ் பெயரில் மோசடி

சென்னை, ஆலப்பாகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு இருந்த பூந்தமல்லி போலீசார், நேற்று விலை உயர்ந்த சொகுசு காரை ஆய்வு செய்துள்ளனர். போலீஸ் வாகனம் என எழுதப்பட்ட ஸ்டிக்கருடன் சொகுசு வாகனத்தை பார்த்த போலீசார், சந்தேகத்தின் பேரில், அதனை நிறுத்தி ஆய்வு செய்ததில், எக்கச்சக்கமாக மது பாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பிரபல தயாரிப்பாளர் கைது

பிரபல தயாரிப்பாளர் கைது

காரில் இருந்த இருவரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் யாரென்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்திருக்கிறது. சாருஹாசனின் 'தாதா 87' படத்தை தயாரித்த கலைசெல்வன் மற்றும் மருத்துவ துறையை சார்ந்த ஆனந்த் ராஜ் என்கிற இருவரையும் போலீசார் கைது செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended Video

True Story : 'என் அழகான மனைவியை இழந்து விட்டேன்' - விஜய் ரசிகரின் உருக்கமான பதிவு
240 மது பாட்டில்கள்

240 மது பாட்டில்கள்

அந்த காரில் மொத்தம் 240 மது பாட்டில்களை தயாரிப்பாளர் கலைசெல்வன் மற்றும் ஆனந்த் ராஜ் ஆகிய இருவரும் கடத்திக் கொண்டு சென்றது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யா கிருஷ்ணன் காரில் மது பாட்டில்கள் சிக்கிய நிலையில், தற்போது மற்றொரு பிரபலத்தின் காரில் மது பாட்டில்கள் சிக்கியிருப்பது கோலிவுட்டில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X