விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் படத்தின் தயாரிப்பாளர் மரணம்
சென்னை: அஜித், விஜய் பட தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி இன்று காலமானார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், விஜய் நடித்த பைரவா, விஷாலின் தாமிரபரணி, தனுஷின் படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களை தயாரித்தவர் பி. வெங்கட்ராம ரெட்டி.

விஜய வாகினி ப்ரொடக்ஷன்ஸின் பி. நாகிரெட்டியின் இளைய மகன் வெங்கட்ராம ரெட்டி. 75 வயதான வெங்கட்ராம ரெட்டி இன்று மதியம் 1 மணிக்கு காலமானார். அவருக்கு மனைவி பாரதி ரெட்டி, மகன் ராஜேஷ் ரெட்டி, மகள்கள் ஆராதனா, அர்ச்சனா ஆகியோர் உள்ளனர்.
வெங்கட்ராம ரெட்டியின் உடல் நாளை காலை சென்னையில் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்ராம ரெட்டி விஜய் சேதுபதி நடித்து வரும் சங்கத்தமிழன் படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் மரணம் அடைந்துள்ளார். வெங்கட்ராம ரெட்டி படங்களை தயாரித்தபோதிலும் கிரெடிட் கார்டில் தனது மனைவியின் பெயரை போட வைப்பார்.


Click it and Unblock the Notifications











