இந்த முறையாவது விஜய்க்கு கிடைக்குமா அந்த ரஜினி பட டைட்டில்? தீவிர முயற்சியில் இறங்கிய இயக்குநர்!

சென்னை: நடிகர் விஜய்யின் 65வது படத்திற்கு ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் பட டைட்டிலை வைக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை துப்பாக்கி, கைதி, சர்கார் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

மீண்டும் ஏ.ஆர். முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற உடனே ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பாக்கி 2 படம் ஆரம்பிக்கப் போகிறது என்று தான் இருந்தது. பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா வீடியோவை பார்த்து விட்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் போட்ட ட்வீட்டும், ரசிகர்கள் மத்தியில் துப்பாக்கி 2 படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஆனால், இல்லை

ஆனால், இல்லை

ஆனால், துப்பாக்கி 2 படம் இல்லை இது வேறு ஒரு கதை என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மறைமுகமாக கொடுத்த சிக்னலை அடுத்து, தளபதி 65 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். துப்பாக்கி 2 வரவில்லை என்றால், கூட பரவாயில்லை தளபதி விஜய்யை வேற லெவல் மாஸாக நீங்க காட்டுவீங்க என்றும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

ரஜினி பட டைட்டில்

ரஜினி பட டைட்டில்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலை படம் நடிகர் விஜய்க்கு ரொம்பவே பிடித்த படம். இளைய தள்பதி என்ற டைட்டில் மாறி தற்போது தளபதி ஆகியுள்ள நடிகர் விஜய்யின் 65வது படத்திற்கு ‘தளபதி' என்ற டைட்டிலையே வைக்க ஏ.ஆர். முருகதாஸ் முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவா

தலைவா

ஏற்கனவே தலைவா படத்திற்கே தளபதி என்ற டைட்டில் பரிசீலனை செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் அந்த டைட்டில் கிடைக்காமல் போகவே தலைவா என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும், தலைவா பட பாடலில் "தளபதி தளபதி" என்ற பாடல் இடம்பெற்று இருப்பது தான் அதற்கு சாட்சி என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

பக்காவா இருக்கும்

பக்காவா இருக்கும்

தளபதி 65 படத்தின் டைட்டில் தளபதி என வைக்கப்பட்டால் செம பக்காவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள், அந்த தகவல் கிடைத்ததும் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர். நடிகர் விஜய் அந்த டைட்டில் வைக்க சம்மதிப்பாரா? என்றும், இந்த படத்திற்கு அந்த டைட்டில் வைக்கப்பட்டால்? சர்கார் போல மற்றொரு அரசியல் படமாக உருவாகுமா? என்ற பல கேள்விகளும் எழுந்துள்ளன. வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X