இந்த வயசுல இதுதேவையா? கணவர் சப்போர்ட் பண்ணல.. நடிகை சந்தோஷி பேட்டி!
சென்னை: ப்ளஷ் பொட்டிக் அண்ட் பியூட்டி லாஞ்ச் என பெண் தொழில் முனைவோராக இருக்கிறார் நடிகை சந்தோஷி. இவர், மேக்கப் ஆர்டிஸ்ட் ஆவது குறித்து என் கணவரிடம் சொன்ன போது, அவர் இதை ஏற்றுக்கொள்ளவே இல்ல, நீ ஒரு நடிகை, ஹீரோயினா நடிச்சு இருக்க, விருது வாங்கி இருக்க நீ போய், கல்யாணத்திற்கு மேக்கப்போடுவியா என்று கேட்டார். வெளியில் இருப்பவர்களும் இந்த வயசுல இது தேவையா என கேட்டார்கள் என்று கூறியுள்ளர்.
பாபா படத்தில் மனீஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை சந்தோஷி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். உனக்கும் எனக்கும்' படத்தின் ஒரிஜினல் வெர்ஷனான 'நுவ்வோஸ்டானந்தே நேனோடந்தனா' படத்தில் நடித்து, சிறந்த பெண் காமெடி நடிகைக்கான நந்தி விருதையும் வென்றார். இதைத் தொடர்ந்து, சினிமாவில் எதிர்பார்த்த கதாபாத்திரம் கிடைக்காததால், சீரியல்களில் தனது கவனத்தை திருப்பினார்.

நடிகை சந்தோஷி: சின்னத்திரை பக்கம் சென்ற சந்தோஷி, கதாநாயகியாக வாழ்க்கை, ருத்ர வீணை, அம்மு, அரசி, இளவரசி, சூரிய புத்திரி, வாடகை வீடு,மரகத வீணை, , பாவ மன்னிப்பு, பொண்டாட்டி தேவை, அரசி உள்ளிட்டவைகள் நடித்து இல்லத்தரசிகளுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார். பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சந்தோஷி, தன்னுடன் நடித்த ஸ்ரீகர் என்பவரை மணந்துக் கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், இரண்டாவது பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். இவர் மரகத வீணை தொடரில் நடித்து வந்த, இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சீரியலை விட்டு வெளியேறினார்.
மேக்கப் ஆர்டிஸ்ட்: தற்போது இவர், ப்ளஷ் பொட்டிக் அண்ட் பியூட்டி லாஞ்ச் என பெண் தொழில் முனைவோராகவும் மிளிர்கிறார். தவிர மேக்கப் ஆர்டிஸ்ட் பயிற்சியும் கொடுத்து வருகிறார் சந்தோஷி. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மேக்கப் ஆர்டிஸ்ட் ஆவது குறித்து என் கணவரிடம் சொன்ன போது, அவர் இதை ஏற்றுக்கொள்ளவே இல்ல, நீ ஒரு நடிகை, ஹீரோயினா நடிச்சு இருக்க, விருது வாங்கி இருக்க நீ போய், கல்யாணத்திற்கு மேக்கப்போடுவியா என கேட்டார். அவருக்கு இதை நான் புரிய வைப்பதற்கே பல நாட்கள் ஆச்சு. அதன் பிறகு என் உழைப்பை பார்த்து என சர்ப்போர்ட் பண்ண தொடங்கினார்.
இந்த வயதில் இது தேவையா: ஒரு சீரியலில் நடித்தா 10 நாட்கள் சூட்டிங் இருக்கும், மீதி 20 நாட்கள் வீட்டில் இருந்து கொண்டு எல்லா வேலையையும் செய்ய வேண்டும், குழந்தைகளை பார்க்க வேண்டும், அது மட்டுமில்லாமல் அடுத்து எப்போ ஷூட்டிங் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இதனால், எனக்கு பிடித்த இந்த வேலையை நான் செய்கிறேன். என் குடும்பத்தில் இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால், வெளியில் இருக்கும் சிலர், இந்த வயசுல இது தேவையா என்று கேட்கிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு நம்மை புரிந்து கொண்டால் போதும், வெளியில் இருப்பவர்கள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என்னை பொருத்தவரையும் மேக்கப்போடுவதும் ஒரு வேலை தான், அதிலும் நம் உழைப்பை கொடுக்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











