பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. வீட்டுக்குள் மயங்கி கிடந்தவருக்கு சிகிச்சை!
ஹைதராபாத்: பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளரும் மகளுமான கல்பனா இன்று தற்கொலைக்கு முயன்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்த செய்திகள் முழுமையாக வெளியாகவில்லை. தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக திரை பிரபலங்கள் பலரும் அவரை நேரில் காண சென்றுள்ளனர்.
இசையமைப்பாளர் மகள்: 70களில் இசையமைப்பாளராக இருந்தவர் ராகவேந்திரர். இவரது மகள் கல்பனா. இசையமைப்பாளர் ராகவேந்தர் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக நடித்திருப்பார். கண்களை இழந்த ராகவேந்திராவுக்கு உறுதுணையாக கல்பனா இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் 2020இல் உயிரிழந்தார்.

குழந்தை நட்சத்திரம்: தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையை தொடங்கிய இவர், புன்னகை மன்னன், பூ பூவா பூத்திருக்கு, ஆண்பாவம் என பல தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கடவுள் தந்த அழகிய வாழ்வு, 'காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே, பெண்ணே நீயும் பெண்ணா, , ஒரு சின்ன வெண்ணிலா போலே, 'மதுரை ஜில்லா மச்சம்தாண்டா', 'டார்லிங் டம்பக்கு இதுபோன்ற ஹிட் பாடல்களை கல்பனா பாடியுள்ளார்.
பாடகி: கல்பனா ராகவேந்தர் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பிடித்த போடா போடா புண்ணாக்கு பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. பின்னர், கல்யாண வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இளையராஜா இசை நிகழ்ச்சிகளல் பல பாடல்களை கல்பனா பாடியுள்ளார்.
தற்கொலை: ஹைதராபாத்தில் இருந்த அவர், தனத இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர் தற்கொலைக்கு முயன்ற செய்தி சினிமா திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது., மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











