பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப்...யாருக்கு பாட்டி தெரியுமா ?

சென்னை : ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார் பிரபல பாடகி உஷா உதுப் !

ட்ரெண்ட் லவுட் Trend Loud நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்த நொடியிலிருந்தே, படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

அக்‌ஷரா ஹாசன்

அக்‌ஷரா ஹாசன்

தற்போது அடுத்த ஆச்சர்யமாக, Trend Loud நிறுவனம், இப்படத்தில் இந்தியாவின் பெரும் புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழில் நடிக்க

தமிழில் நடிக்க

இத்தருணம் மிகப்பெரும் பெருமை தரக்கூடியது. வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ள ஆளுமையான பாடகி உஷா உதுப் அவர்களுடன் பணிபுரிய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மிகப்பெரும் பாக்கியம் ஆகும். மேலும் 10 வருடத்திற்கு பிறகு ஒரு தமிழ் படத்தில் அதுவும் எங்கள் படம் மூலம் அவரை தமிழில் நடிக்க அழைத்து வருவது எங்களுக்கு பெருமையே.

துறுதுறுப்பு

துறுதுறுப்பு

அவர் இப்படத்தில் கர்நாடக சங்கீத வித்தகராக, அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பு வாழ்விற்கு முற்றிலும் நேரெதிரானது. ஆனால் அவர் இக்கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போவார். மிகப்பிரபல பாடகி, மிகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, அனைவரிடமும் மிக எளிமையாக பழகும் அவரது அன்பான இயல்பு, அவரது துறுதுறுப்பு படக்குழுவில் அனைவரிடமும் பெரும் உற்சாகத்தை கொண்டு வந்திருக்கிறது.

Recommended Video

Shruthi Hassan MakeUp Tutorial | Makeup | Quarantine
பாட்டியாக நடிப்பது

பாட்டியாக நடிப்பது

முற்றிலும் இயக்குநரின் நடிகை, அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. இறுதியாக அவர் நமது உலக நாயகன் கமலஹாசன் அவர்களுடன் திரையில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் அக்சஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிப்பது மேலும் ஒரு சிறப்பு. உஷா உதுப் என்றால் அழகான பொட்டு , கம்பீரமான குரல் , சந்தோஷமான முகம் அற்புதமான பாசிட்டிவ் வைப்ஸ் என்று அனைவருக்கும் தெரியும். அவர் நடிக்கும் படங்களும் அப்படி தான் இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கை. பாட்டியாக என்னவெல்லாம் செய்து இருக்கிறார் என்பது அனைவரது ஆவல் . பொறுத்து இருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X