பிரபல இளம் டிக்டாக் ஸ்டார் திடீர் தற்கொலை.. 16 வயதில் இப்படியொரு முடிவா..? ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: பிரபல இளம் டிக் டாக் ஸ்டார் தற்கொலை செய்திருப்பது, ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை.
அதற்குள் நடந்துள்ள அடுத்த தற்கொலை, ரசிகர்களுக்கு மேலும் ஷாக் கொடுத்துள்ளது.

சியா கக்கார்
டிக்டாக் செயலியில் பிரபலமாக இருந்தவர், சியா கக்கார் ( Siya Kakkar). டெல்லியை சேர்ந்த இந்த 16 வயது ஸ்டாருக்கு ஏகப்பட்ட பாலோயர்கள். இவரது டான்ஸ் வீடியோக்கள் அதிகமான ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. அவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்வது வழக்கம். ஆயிரக்கணக்கான கமென்ட்களும் குவியும்.

தற்கொலை
அவரது சோசியல் மீடியா பக்கத்திலும் அவருக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்தான், முன்னணி நிறுவனத்துடன் இணைந்து இசைத்துறையில் பணியாற்ற வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதனால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவரது மானேஜர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
உடனடியாக
இதுபற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அவரது செல்போனை கைபற்றியுள்ள போலீசார் அதை வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலைகுலைய
சியா கக்காரை, சிலர் மிரட்டி வந்ததாகவும் அவர் அதற்காகத்தான் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த தற்கொலை அவரது லட்சக்கணக்கான ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அவர்கள், சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications