Neelima Rani : புருஷனை பார்த்து தாத்தாவான்னு கேக்குறாங்க..கண்கலங்கிய நீலிமா ராணி!
சென்னை : புருஷனை பார்த்து தாத்தாவான்னு கேக்குறாங்க என்று நடிகை நீலிமா ராணி பேட்டி ஒன்றில் கண்கலங்கி பேசி உள்ளர்.
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நீலிமா ராணி, தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும், சின்னத்திரையில் மெட்டி ஒலி, கோலங்கள், தென்றல், வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள், போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 16 1947 : நடிகை நீலிமா ராணி அண்மையில் வெளியான ஆகஸ்ட் 16 1947 என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் நடித்த காட்சி வெறும் ஐந்து நிமிடமே வந்தாலும், அந்த கேரக்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் நீலிமா, கௌதம் கார்த்திக்கின் அம்மாவாக நடித்துள்ளார்.
நீலிமா ராணி : இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நீலிமா ராணி பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த படத்திற்காக பொன்குமார் என்னை அழைத்த போது படத்தின் முக்கியமான கதாபாத்திரம், இந்த படம் வெளியாகும் போது நிச்சயம் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள் என்றார். உடனே எத்தனை நாள் கால்ஷீட் வேணும் என்று கேட்டேன், ஒரு நாள் போதும் என்றார். அதைக் கேட்டதும் ஒருநாளில் என்ன எடுப்பீங்க என்று ஆச்சரியமாக கேட்டேன். ஆனால், அவர் அரைநாளிலேயே அந்த காட்சியை எடுத்து முடித்துவிட்டார்.
எனக்காக காத்திருந்தார் : நான் கர்ப்பமாக இருக்கும் போது ஒரு போட்டோஷூட் செய்திருந்தேன் அதைப்பார்த்த பொன்குமார், இந்த மாதிரி ஒரு முகம் வேண்டும், லட்சணமான முகம் வேண்டும், அம்மா என்று சொன்னதும் மனதிற்குள் ஒரு தாக்கம் வரவேண்டும் என்பதற்காக எனக்கு குழந்தை பிறக்கும் வரை காத்திருந்தார். இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது படம் பார்த்து விட்டு பலர் பாராட்டுவதை கேட்கும் போது ஏதோ சாதித்தது போல இருக்கிறது.
தாத்தாவான்னு கேக்குறாங்க : தொடர்ந்து பேசிய நீலிமா, என் கணவரின் புகைப்படத்தை பார்த்து, தாத்தாவா, அப்பாவா, தாத்தாக்கூட வெளியில் போறீங்களா என்று கேட்கிறார்கள். என் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் தான், மற்றவர்களுக்காக 'டை' அடித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று அவரும் விரும்பவில்லை, நானும் விரும்பவில்லை. ரியலாக எப்படி இருக்கமுடியுமோ அப்படி இருக்கிறார். இதனால், யார் எந்த கருத்தை தெரிவிப்பதாக இருந்தாலும், அந்த கருத்தை தன்னை முன்வைத்தும், தன்னுடைய சந்ததியை முன்வைத்தும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











