புஷ்பா 2 வில் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவரா?...அப்போ இன்னொரு 'ஊ சொல்றியா மாமா'கன்ஃபார்ம்

சென்னை : 2020 ம் ஆண்டின் இறுதியில் பான் இந்தியா படமாக ரிலீசாகி வசூலை குவித்த படம் புஷ்பா. தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடித்த இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தின் சமந்தா ஆடிய, 'ஊ சொல்றியா மாமா'அயிட்டம் சாங் படத்திற்கு மிகப் பெரிய ரீச்சை கொடுத்தது.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக புஷ்பா 2 விரைவில் உருவாக்கப்பட உள்ளது. புஷ்பா 2 படம் பான் வேர்ல்டு படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

10 மொழிகளில் புஷ்பா 2

10 மொழிகளில் புஷ்பா 2

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் தங்களின் கேரக்டரிலேயே நடிக்க உள்ளனர். டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் விரைவில் இரண்டாம் பாகத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. இந்த படம் 2023 ம் ஆண்டின் மத்தியில் உலகம் முழுவதும் 10 மொழிகளில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா 3 ம் வருதா?

புஷ்பா 3 ம் வருதா?

புஷ்பா 2 படத்தில் வில்லன் ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. விஜய் சேதுபதியை மையமாக வைத்து கதை நகரும் என்பதால் புஷ்பா 3 வரவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது புஷ்பா 2 படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஓகே சொல்லி விட்டதாக சொல்லப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜோடி இவரா?

விஜய் சேதுபதிக்கு ஜோடி இவரா?

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்க உள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க பிரியா மணியிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 38 வயதாகும் பிரியா மணி, அமீரின் பருத்திவீரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

இன்னொரு அயிட்டம் சாங் இருக்கு

இன்னொரு அயிட்டம் சாங் இருக்கு

புஷ்பா 2 படத்தில் பிரியா மணி நடிக்கிறார் என்ற தகவலை படக்குழு விரைவில் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் புஷ்பா 2 படத்தில், ஊ சொல்றியா மாமா பாடல் போல் மற்றொரு பான் இந்தியா பாடல் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலை பிரியா மணி ஆட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Sibiraj | Pushpa படம் உங்கனால தான் பார்த்தேன் | Sibiraj Funny Speech | Vattam Press Meet | *Launch
விஜய் சேதுபதி நல்லா வாழுறார்

விஜய் சேதுபதி நல்லா வாழுறார்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரியா மணி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால், அதெப்படி வில்லனாக நடித்தாலும் விஜய் சேதுபதிக்கு மட்டும் ஜோடி இருக்கு. விக்ரம் படத்தில் 3 ஜோடி. இப்போது புஷ்பா 2 படத்திலும் பிரியா மணி ஜோடியா. ஆனால் புஷ்பா படத்தில் வில்லனாக காட்டப்படும் ஃபகத் ஃபாசிலுக்கு ஏன் ஜோடி கிடையாது. ஹீரோவா நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும் சரி விஜய் சேதுபதிக்கு மட்டும் ஜோடி இருக்கு. நல்லா வாழுறார் மனுஷன் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X