விஜய்யின் தெலுங்கு படத்தில் இணைந்த பிரபல தமிழ் இயக்குனர்!

சென்னை : கோலமாவு கோகிலா என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இப்போது விஜய் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இப்பொழுது ஹைதராபாத் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னையில் படக்குழு தஞ்சமடைந்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்திக் கொண்டு வருகிறது. நடிகை பூஜா ஹெக்டே இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் அடுத்ததாக தோழா பட இயக்குனர் வம்ஷி உடன் இணைந்து தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்போது அந்த படத்தில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

பீஸ்ட்

பீஸ்ட்

விஜய்யின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும்போது புதிய புதிய சாதனைகளை செய்து வருகின்றன அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வசூலை வாரிக் குவித்தது. உலக அளவில் 2021ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் முதல் 50க்குள் இடம் பிடித்த ஒரே ஒரு இந்திய திரைப்படம் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் அல்லது அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் 65 ஆவது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு பீஸ்ட் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்க சமீபத்தில் பீஸ்ட் படத்தின் இரண்டு தாறுமாறான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி இணையதளத்தை தெறிக்க விட்டது. முகமூடி மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அதன்பிறகு தமிழில். சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தவர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் பீஸ்ட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ மிகப்பெரிய வசூல் சாதனையை செய்த நிலையில் அதில் இடம்பெறும் புட்டபொம்மா பாடல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே ஆடிய நடனம் பாடலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்க பூஜாவை ரசிகர்கள் புட்ட பொம்மா என அழைக்க ஆரம்பித்துள்ளனர் . தமிழில் இவருக்கு இப்பொழுது மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் ஓடிடியில்

டாக்டர் ஓடிடியில்

வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்திருந்த இயக்குனர் செல்வராகவன் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி கோலிவுட்டை பரபரப்பாகி வரும் நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் நெல்சன் அடுத்து இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். மருத்துவத்துறையில் நடைபெறும் மாஃபியாக்களை கண்டறியும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. இன்று வரை திரையரங்குகளுக்காக டாக்டர் காத்திருக்கிறது . அதே சமயம் டாக்டர் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆனால் இதுவரை ஓடிடி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார்.

சம்பளம் 120 கோடி

சம்பளம் 120 கோடி

இதுவரை தமிழில் மட்டுமே நடித்து வந்த விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆம் கார்த்தியின் தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி விஜய் 66 வது படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியானதை அடுத்து இப்படம் குறித்த புதுபுது தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இப்படத்தை தயாரிக்க தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது மேலும் இந்த படத்திற்காக விஜய்க்கு இதுவரை இல்லாத அளவிற்கு சம்பளம் 120 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Vijay Tv Serial Actor Vinoth Babu's Wife Sindhu Baby Shower | Mr&Mrs.Chinnathirai
இயக்குனர் ராஜுமுருகன்

இயக்குனர் ராஜுமுருகன்

விஜய் 66 முதல் கட்ட பணிகளை ஏற்கனவே தொடங்கிய இயக்குனர் வம்ஷி இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை துவங்கவும் திட்டமிட்டுள்ளாராம். மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யின் மார்க்கெட் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அளவில் இருப்பதால் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு உருவாக உள்ளது. இந்த நிலையில் விஜய் 66 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று இப்பொழுது கிடைத்துள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாவதால் இப்படத்திற்கு இயக்குனர் ராஜுமுருகன் தமிழ் வசனம் எழுத உள்ளதாக முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜோக்கர், குக்கூ என உலகத்தரம் வாய்ந்த படங்களை இயக்கிய இயக்குனர் ராஜுமுருகன் இப்பொழுது விஜய்யின் 66வது படத்தில் இணைந்து இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவிலேயே எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X