தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு.. தமிழ் சினிமா படங்களும் வடிவேலு வெர்ஷனும்.. தெறிக்கும் மீம்கள்!

சென்னை: தலைவன் வடிவேலு நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகள் வரை அத்தனைக்கும் மீம் போட உதவி வருகின்றன.

இதுவரை வந்த பிரச்சனை மட்டுமின்றி இனி வரப் போகும் புதிய பிரச்சனைகளுக்கும் வடிவேலு நடித்து வைத்த காட்சிகள் நிச்சயம் பொருந்தி போகும்.

இந்நிலையில், சினிமாவை மட்டும் சும்மா விட்டு விடுவாரா வடிவேலு.. அவர் நடித்த காட்சிகளை கொண்டு தமிழ் சினிமா படங்கள் உருவானதாக ஏகப்பட்ட மீம்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

தலைவன் வேற ரகம்

தலைவன் வேற ரகம்

வைகைப் புயல் வடிவேலு ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே தமிழ் சினிமாவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கமல் சாரை விட எக்கச்சக்க கெட்டப்புகளை போட்டு கை புள்ளையாகவும், நாய் சேகராகவும், வக்கீல் வண்டு முருகனாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை எப்போதுமே சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.

மீம்களின் அரசன்

மீம்களின் அரசன்

இம்சை அரசனான வடிவேலு சமூக வலைதளங்களில் மீம்களின் அரசனாக வலம் வருகிறார். வடிவேலு சமீப காலமாக படங்களில் ஏதும் நடிக்கவில்லை என்றாலும் கூட, வடிவேலுவின் புகைப்படத்தையோ, வடிவேலும் காமெடி வசனத்தையோ கேட்காமல் ஒரு நாள் கூட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகராது.

வடிவேலு வெர்ஷன்

வடிவேலு வெர்ஷன்

ரவுடி பேபியாக இருந்தாலு சரி, மாஸ்டர் டீசராக இருந்தாலும் சரி இனி வரவுள்ள வலிமை, தளபதி 65 டீசர்கள் மற்றும் பாடல்களுக்கு தனித் தனியே வடிவேலு வெர்ஷன் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் அட்ராசிட்டி பண்ணப் போவது நிச்சயம். இந்நிலையில், தற்போது தமிழ் சினிமா படங்களின் டைட்டில்களை வைத்து வெளியாகி உள்ள வடிவேலு வெர்ஷன் பார்த்த உடனே குபீரென சிரிக்க வைக்கிறது.

என்னடா நடக்குது இங்க

என்னடா நடக்குது இங்க

ஆழ்க்குழாய் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கப் போராடும் கலெக்டராக அறம் படத்தில் நடிகை நயன்தாரா நடித்திருப்பார். அந்த படத்தின் டைட்டிலை வில்லு படத்தில் வடிவேலு கிணற்றில் இருந்து வெளியே வரும் காட்சியுடன் ஒப்பிட்டு மீம் போட்டு வைரலாக்கி உள்ளனர் நெட்டிசன்கள்.

மான்ஸ்டர் - சுந்தரா டிராவல்ஸ்

மான்ஸ்டர் - சுந்தரா டிராவல்ஸ்

மறைந்த நடிகர் முரளியும் வடிவேலுவும் நடித்த எபிக் மூவி சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் எலி தொல்லை காட்சியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தான் மான்ஸ்டர் படம் உருவாகி இருக்கும் என்பதை உணர்த்துகிறது இந்த தெறி மீம்.

முதல்வன் - கவண்

முதல்வன் - கவண்

மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா சபாஸ்டியன் நடிப்பில் வெளியான கவண் படத்திற்கு வடிவேலுவிடம் ஷங்கரின் முதல்வன் படத்தின் காட்சியிலேயே சரக்கு இருப்பதாக அட்டகாசம் செய்து வருகின்றனர் தீவிர வடிவேலு விசிறிகள்.

மோசடி மன்னன்

மோசடி மன்னன்

தல அஜித்தின் வலிமை படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் எச். வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை படத்துக்கும் தலைவன் வடிவேலு தாங்க இன்ஸ்பிரேஷனே என அடித்து சொல்கிறது இந்த மோசடி மன்னன் காமெடி. இதுமட்டுமல்ல சந்திரமுகி தொடங்கி மாஸ்டர் வரை எல்லா படத்துக்குமே இப்படி வடிவேலு வெர்ஷன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

More from Filmibeat

Read more about: vadivelu வடிவேலு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X