நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னா தெரியுமா? ஒரு மாதமாகியும் குறையாத ரொமான்ஸ்!

சென்னை : மகாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் திருமணம் ஆகி ஒரு மாதமாகி உள்ளதை கொண்டாடி வருகின்றனர்.

தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மிகவும் ரகசியமாக இவர்களது திருமணம் நடந்தது. இன்ஸ்டாகிராம் திருமண புகைப்படத்தை ரவீந்திரன் ஷேர் செய்த பின்பே இவர்களுக்கு திருமணமான செய்தி அனைவருக்கும் தெரிந்தது.

ரவீந்திரன்,மகாலட்சுமி

ரவீந்திரன்,மகாலட்சுமி

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு மாதமாகிவிட்ட நிலையிலும், ஹாட் டாப்பிக் இவர்களின் திருமணம் பற்றிதான் பேச்சாக உள்ளது. இந்த இளம் ஜோடியும் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஜாலியா வெளிநாட்டுக்கு ஹனிமூன் போவாங்கனு பார்த்தா, மகாபலிபுரத்திலேயே ஹனிமூன் கொண்டாடி விட்டு, அனைத்து ஊடகங்களுக்கும் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகின்றனர்.

திருப்பதியில் திருமணம்

திருப்பதியில் திருமணம்

சமீபத்தில் இவர்கள் இருவரும் அளித்த பேட்டியில், திருமணத்தை ரகசியமாக செய்ய காரணம் என்ன என பலரும் கேள்விகேட்ட நிலையில், அதற்கு பெரிய காரணம் எதுவுமே இல்லை. எங்கள் இருவருக்கும் மிகவும் ஆடம்பரமாக தடபுடலாக எப்படி எப்படி எல்லாம் திருமணம் நடக்கவேண்டும் என்று ஆசைபட்டோமோ அப்படி ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்து விட்டது. இப்போது, எங்களுக்கு என்று வாழ்க்கையை பற்றிய புரிதல் இருப்பதால், இரண்டாவது திருமணத்தை திருப்பதியில் செய்து கொண்டோம் என்றனர்.

கொஞ்சம்கூட பொருத்தமே இல்லை

கொஞ்சம்கூட பொருத்தமே இல்லை

இப்படி ஒரு அழகான பொண்ணு எப்படி, கொஞ்சம்கூட பொருத்தமே இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருக்கிறது. நான் தயாரிப்பாளர் பணத்திற்காக நடந்த திருமணம் என்பதால், பணத்திற்காகத்தான் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அது அரேஞ்ச் மேரேஜில் தான் நடக்கும் லவ் மேரேஜில் நடக்காது என்றார்.

லவ் யூ முயலு

லவ் யூ முயலு

இந்நிலையில், மகாலட்சுமிக்கும் ரவீந்தருக்கும் திருமணமாகி ஒரு மாதமாகி உள்ள நிலையில், காலையிலேயே இருவருமே கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். மகாலக்ஷ்மி தனது மார்பில் சாய்ந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். முதல் மாத அனிவர்சரி... மக்கள் நம்மை பார்த்து சிரிக்க 100 காரணங்கள் இருக்கும்... என் சந்தோஷத்திற்கு ஒரே காரணம்... அது நீ தான்... லவ் யூ முயலு... என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X