பிரிந்து வாழும் மனைவியின் வீட்டில் திருடிய அனுஷ்காவின் 'ரீல்' கணவர் கைது
Recommended Video

ஹைதராபாத்: பிரிந்து வாழும் மனைவியின் வீட்டில் திருடிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சாம்ராட் ரெட்டி. பஞ்சாக்ஷரி படத்தில் அனுஷ்காவின் கணவராக நடித்தவர் சாம்ராட். அவருக்கும் ஹரிதா ரெட்டி என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.

வழக்கு
ஹரிதா ரெட்டி சாம்ராட் மீது வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாம்ராட் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் ஹரிதா சாம்ராட் மீது மீண்டும் புகார் அளித்துள்ளார்.

திருட்டு
ஹரிதா ஊரில் இல்லாத நேரத்தில் ஹைதரபாத்தில் மாதபூர் பகுதியில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்று சாம்ராட் மற்றும் அவரது சகோதரி விலை உயர்ந்த நகைகள், பொருட்கள் ஆகியவற்றை திருடியுள்ளனர்.

கைது
ஊர் திரும்பிய ஹரிதா தனது வீட்டில் திருடு போனது குறித்து சாம்ராட் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்ராட்டை கைது செய்துள்ளனர். அவரின் சகோதரி கோவாவிற்கு சென்றுள்ளார். அவர் ஊர் திரும்புவதற்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

கள்ளத்தொடர்பு
சாம்ராட் ரெட்டி போதைக்கு அடிமை என்றும், வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் ஹரிதா தெரிவித்துள்ளார். ஆனால் சாம்ராட் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் சினிமா படங்களில் நடிக்கக் கூடாது என்று ஹரிதா வற்புறுத்தியதாக சாம்ராட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











