அஜித் அற்புதமான மனிதர்… தலயுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகர் !

சென்னை : நடிகர் நவதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல அஜித்தை புகழ்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலை போல் குவிந்து வருகின்றன.

நவ்தீப்

நவ்தீப்

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நவ்தீப். இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அற்புதமான மனிதர்

அற்புதமான மனிதர்

2008ம் ஆண்டு ராஜு சுந்தரம் இயக்கத்தில் உருவான ஏகன் திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். இவர், தல அஜித்துடன் இணைந்து பைக் ரைடிங் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் தூய்மையான அன்பு கொண்ட இவரது குரலில் "ஹாய்" என கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது... நீண்ட வருடங்களுக்கு பிறகு இவரை காணும் போதும் அதே எளிமையோடு இருக்கிறார்... உண்மையிலேயே அற்புதமான மனிதர் இவர்... அதனால் தான் இவர் எப்போதும் தல என தெரிவித்துள்ளார். தல அஜித்துடன் நவதீப் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வலிமை

வலிமை

நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில் தள்ளிப்போனது. தற்போது படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால், சமீபத்தில் முக்கியமான இணைப்புக் காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்து முடித்தது படக்குழு.

படப்பிடிப்பு முடிந்தது

படப்பிடிப்பு முடிந்தது

படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட வலிமை படக்குழுவினர் ரஷ்யா சென்றனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர். இதையடுத்து, வலிமை படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

அஜித்துக்கு ஜோடியாக

அஜித்துக்கு ஜோடியாக

இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்தவர். இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தாலும், தமிழ் மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து தரமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X