Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் சாவுக்கு 3 பேர் காரணம்: செல்ஃபி வீடியோ எடுத்துவிட்டு காமெடி நடிகர் தற்கொலை
Recommended Video
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு காமெடி நடிகர் விஜய் சாய் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். செல்ஃபி வீடியோ எடுத்து வைத்துவிட்டு இறந்துள்ளார்.
சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் விஜய் சாய். அவர் ஹைதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பண பிரச்சனை
மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் விஜய். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பணக் கஷ்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
விவாகரத்து
விஜய் சாய்க்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவரின் முன்னாள் மனைவி அவரை டார்ச்சர் செய்து பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டாராம்.
மகள்
விஜய் சாயை அவரது மகளை பார்க்காவிடாமல் அவரின் முன்னாள் மனைவி கொடுமைப்படுத்தினாராம். மேலும் ஆட்களை அனுப்பி விஜய் வைத்திருந்த மாருதி ஸ்விப்ட் காரையும் எடுத்துச் சென்றுவிட்டாராம் அந்த பெண்.
செல்ஃபி வீடியோ
விஜய் இன்று காலை 4 மணி முதல் 5 மணிக்குள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்யும் முன்பு அவர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார். அதில் தனது சாவுக்கு காரணம் முன்னாள் மனைவி, அவரின் வழக்கறிஞர், இயக்குனர் சசிதர் என்று கூறியுள்ளாராம்.