Leo Fake Tickets: விஸ்வரூபம் எடுக்கும் போலி டிக்கெட் பிரச்சனை.. பெரிய சிக்கலில் சிக்கப் போகும் லியோ?

சென்னை: மதுரையில் உள்ள பிரபல தியேட்டரில் லியோ படத்துக்கு இப்பவே போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக தியேட்டர் நிர்வாகமே பரபரப்பு புகார் ஒன்றை கிளப்பி உள்ளது.

சமீபத்தில் சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கச்சேரியில் போலி டிக்கெட்டுகள் அச்சு அடித்ததால் தான் எதிர்பாராத அளவுக்கு கூட்டம் கூடி மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என பஞ்சாயத்து கிளம்பியது.

Popular Theater alerts Vijays Leo movie fake tickets circulated with proof

லியோ படத்திற்கு ஆடியோ லான்ச் நடைபெறாமல் போகவும் இதே போலி டிக்கெட் பிரச்சனை தான் என்றும் கூறினர்.

பல கத்தி குத்து: லியோ படத்திற்கு விஷ்ணு எடவன் எந்த நேரத்தில் "கத்தி பல கத்தி குத்து காத்திருக்கு.. அதுதான் கணக்கு.. இந்த கத்தி வேற ரகம் வேணா ஸ்கெட்ச் எனக்கு" என எழுதியதில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் குவிகிறதா? அல்லது தொடர்ந்து விஜய் படங்களுக்கு பிரச்சனை வரத்தான் செய்யும் என்பதை யூகித்து அப்படி எழுதினாரா தெரியவில்லை. இதற்கு முன் இல்லாத அளவுக்கு இந்த முறை ஏகப்பட்ட சிக்கல் ஒன்றன் பின் ஒன்றாக விடாத கருப்பாக துரத்தி வருகிறது.

போலி டிக்கெட்: மதுரையில் உள்ள பிரபல தியேட்டரான பிரியா சினிமாஸ் பெயரில் லியோ படத்துக்கு அக்டோபர் 18ம் தேதி காட்சிக்கான சிறப்பு டிக்கெட்டுகள் என டூப்ளிகேட் டிக்கெட்டுகளை விற்பனை செய்திருப்பதாக ட்விட்டரில் டிக்கெட்டுகளுடன் போஸ்ட் போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லியோ படத்தின் டிக்கெட் புக்கிங் இன்னும் ஆரம்பமாகாத நிலையில், விஜய் ரசிகர்களை டார்கெட் செய்து போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்ய மர்ம கும்பல் களத்தில் இறங்கி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Popular Theater alerts Vijays Leo movie fake tickets circulated with proof

விஜய்க்கு செக்: நடிகர் விஜய் படம் வெளியாகும் போது தான் ஆடியோ லான்ச் ரத்து, போலி டிக்கெட் பிரச்சனை, புகை பிடிக்கக் கூடாது, கெட்ட வார்த்தை பேசக் கூடாது, மது குடிக்கக் கூடாது என ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பி வருவதாகவும் மற்ற படங்களுக்கு எந்த சிக்கலும் வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.

இன்று மாலை லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான அன்பெனும் பாடல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X