எம்ஜிஆருக்கே கிடைக்காத பெருமை?.. கேப்டன் விஜயகாந்த் படத்தை இந்த தியேட்டர்ல இலவசமா பார்க்கலாம்!

சென்னை: கடந்த டிசம்பர் 28ம் தேதி தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி தமிழக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாக கேப்டன் விஜயகாந்த் மறைவு அமைந்தது. சிங்கம் போல சினிமாவிலும் சட்ட சபையிலும் கர்ஜித்து வந்த கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பு காரணமாக மருத்துவ சிகிச்சையிலேயே தனது நாட்களை அதிகம் செலவிட்டு வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது சினிமா பிரபலங்களையும், அரசியல் தலைவர்களையும் பொதுமக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அலை கடலென மக்கள் திரண்டு வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு சினிமாவிலும் அரசியலிலும் கொடி கட்டிப் பறந்த விஜயகாந்துக்குத் தான் இப்படியொரு மக்கள் கூட்டம் கூடியது என பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில், எம்ஜிஆருக்கே கிடைக்காத பெருமையாக கேப்டன் விஜயகாந்த் படத்தை இலவசமாக மக்களுக்கு ஒரு திரையரங்கம் அறிவிப்பு போஸ்டருடன் திரையிட்டு வருகிறது.

Popular theater arranges for a free movie shows for Vijayakanth fans


மக்கள் செல்வாக்கு அதிகம்: மக்கள் மத்தியில் கேப்டன் விஜயகாந்துக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. அவரது மறைவின் போது அது வெளிப்படையாக தெரிந்தது. அந்த அளவுக்கு ஒவ்வொரு ஊர்களிலும் நடிகர்கள் இப்போது நலத்திட்ட உதவிகளையும் நிவாரண உதவிகளையும் செய்வது போல பல ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்து அசத்தியவர் விஜயகாந்த். முகத்தில் பொய்யே இல்லாமல் மனதில் பட்டதை பளிச்சென பேசக்கூடிய அவரை மக்கள் எப்போதும் தங்கள் மனதிலேயே வைத்திருக்கின்றனர்.

பேரரசு படம் இலவசமாக திரையிடல்: ”மதுரை நாகமலை புதுக்கோட்டை சினிமா விநியோகஸ்தர் காசி பிலிம்ஸ் நிறைய விஜயகாந்த் படங்களை வெளியிட்டவர். அவர் தற்போது இல்லை. அவரது மகன் இந்த தியேட்டரை நடத்தி வருகிறார். விஜயகாந்த் நினைவாக நேற்றில் இருந்து படம் பொதுமக்களுக்கு கட்டணம் இல்லாமல் திரையிடப்படுகிறது. எம்ஜிஆர் இறந்தபோது கூட இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதாக ஞாபகம் இல்லை.” என ரசிகர்கள் விஜயகாந்த் மறைவை ஒட்டி அவரது நினைவாக நாகமலை காசி தியேட்டர் இலவசமாக பேரரசு படத்தை தினமும் 4 காட்சிகள் வெளியிட்டு இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் விஜயகாந்துக்கு ஒவ்வொருத்தரும் அவர்களுக்கு பிடித்த வகையில் அஞ்சலி செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X