»   »  பிரபல நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

பிரபல நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல டிவி சீரியல் நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மனோஜ் கோயல். அவரின் மனைவி நீலிமா(40). இல்லத்தரசி. அவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். சனிக்கிழமை மனோஜ் வேலைக்கு சென்றுவிட்டார், மகள் டியூஷனுக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்துள்ளார் நீலிமா.

தற்கொலை

தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நீலிமா படுக்கையறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

மகள்

மகள்

டியூஷனுக்கு சென்ற மகள் வீடு திரும்பியபோது படுக்கையறை கதவு பூட்டியிருந்ததை பார்த்து தட்டியும் நீலிமா திறக்கவில்லை. உடனே அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூற அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸ்

போலீஸ்

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நீலிமா பிணமாகத் தொங்கினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரணம்

காரணம்

நீலிமாவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது மனநலம் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மோசமாவதால் இந்த முடிவு எடுப்பதாக நீலிமா கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.

English summary
Popular television actor Manoj Goyal's wife Nileema has committed suicide by hanging herself at their residence in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil