Don't Miss!
- News சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.. ஏற்புடையது இல்லை.. மோடியை நேரடியாக அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏன் என்னாச்சு? பிரபல சின்னத்திரை நடிகை விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: பிரபல டிவி நடிகை திடீரென விவாகரத்து செய்துகொண்டது சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' தொடரில் சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
இதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இது இந்தியில் வெளியான, சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக்.
அஜித் குறித்து 'அப்படி' பேசி சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் நடிகை.. கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!
அவளும் நானும்
இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்மகள் வந்தாள்' என்ற தொடரில் ரோகிணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடரும் நன்றாகப் பேசப்பட்டது. இதையடுத்து அவளும் நானும் என்ற தொடரிலும் நடித்தார். இதிலும் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. மலையாள நடிகையான மேக்னா வின்சென்ட், அங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.
கயல் படத்தில்
சில மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர், தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்த கயல் படத்திலும் நடித்திருந்தார். இவர் டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். டான் டோமியின் சகோதரி டிம்பிள் ரோஸூம் சின்னத்திரை நடிகை.
திருமணம்
மேக்னா - டான் டோமி, டிம்பிள் - ஆன்சன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் ஒரே நாளில் திருச்சூரியில் நடந்தது. டிம்பிள் திருமணம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. மேக்னா- டான் டோமி திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரைத்துறையினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
விவாகரத்து
இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். டான் டோமி, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரபல டிவி நடிகை ஒருவர் விவாகரத்து செய்துள்ள செய்தி, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.