Just In
- 8 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 34 min ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 43 min ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 1 hr ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
Don't Miss!
- News
தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Sports
கோவாவை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்.. டிராவில் முடிந்த போட்டி!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி

சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாராம்.
பிரபலமான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் டிடி எனப்படும் திவ்யதர்ஷினியும் ஒருவர். தனது பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சினிமா படங்களிலும் நடித்து வருகிறார்.

நண்பர்
டிடிக்கும் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

பிரச்சனை
திருமணத்திற்கு பிறகு டிடி படங்களில் நடிப்பது அவரின் கணவர் வீட்டாருக்கு பிடிக்கவில்லை. இதனால் டிடிக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

பிரிவு
கணவர் வீட்டார் எதிர்த்தாலும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, படங்களில் நடிப்பதை டிடி நிறுத்தவில்லை. இதனால் பிரச்சனை பெரிதாகி டிடியும், அவரது கணவரும் பிரிந்து வாழத் துவங்கினர். பவர் பாண்டி படத்தின் டைட்டிலில் செல்வி டிடி என்று குறிப்பிடப்பட்டதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நீதிமன்றம்
பிரிந்து வாழும் டிடியும், ஸ்ரீகாந்தும் பரஸ்பரம் விவாகரத்து பெற விரும்புவதாகக் கூறி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.