அடுத்தடுத்து இரண்டு மரணம்: அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்

By Siva

Recommended Video

அடுத்தடுத்து இரண்டு மரணம்: அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்-வீடியோ

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு இயக்குனர் ஜெயா உடல்நலக்குறைவால் காலமானார்.

எம்.ஏ. படித்த பிறகு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையை துவங்கியவர் ஜெயா. தெலுங்கு நாளிதழான ஆந்திரா ஜோதியில் எழுதி வந்த அவர் பிரபல சினிமா பத்திரிகையாளரும், பி.ஆர்.ஓ.வுமான பி.ஏ. ராஜுவை திருமணம் செய்தார்.

Popular woman director Jaya no more

2003ம் ஆண்டு ஜெயா சந்திகாடு என்ற படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார். பிரேமிகுலு, லவ்லி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெயா இதய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.20 மணிக்கு காலமானார். அவர் இறந்த செய்தி அறிந்த தெலுங்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நடிகை காம்னா ஜெத்மலானியை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஜெயா. தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்த பெண் இயக்குனர்களில் ஜெயாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

29ம் தேதி நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணா, 30ம் தேதி ஜெயா என்று அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்துள்ளதால் தெலுங்கு திரையுலகம் கவலையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X