காதல் வலையில் சிக்கிய நிவேதா தாமஸ்.. மாப்பிள்ளை யாரா இருக்கும்.. ஆர்வத்தில் ஃபேன்ஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோயினாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நிவேதா தாமஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், ஜில்லா படத்திற்கு விஜய்க்கு தங்கையாகவும் நடித்து பிரபலமான இவர், தற்போது காதல் வலையில் விழுந்து இருப்பதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் ஒரு செய்திகள் வெளியாகி வருகிறது.

சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த நிவேதா, குருவி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதன் பின் இவருக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லாததால்,தெலுங்கு பக்கம் போன இவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருந்தால், இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கில் நானியுடன் இவர் நடித்த ஜென்டில்மேன் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

Nivetha Thomas marriage Darbar

நடிகை நிவேதா தாமஸ்: இதையடுத்து, நிவேதா தாமஸ், நானியுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார். இருவருக்கும் கெமிஸ்டிரி சும்மா மிரட்டலாக இருந்ததால், திரையில் இவர்களின் ஜோடி அனைவருக்கும் பிடித்துப்போனது. இதனால், டோலிவுட் வட்டாரத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இதை மறுத்த நிவேதா தாமஸ் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறினார்.

பிரேக்அப்: இதைத்தொடர்ந்து, நிவேதா தாமஸ், மலையாள இளம் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், இருவருக்கும் பிரேக்கப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. நிவேதாவின் பெற்றோர் இந்த காதல் சரிப்பட்டு வராது என, காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதால் நிவேதா காதலை முறித்துக்கொண்டதாக செய்தி பரவியது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய நிவேதா, இப்போது தான் எனக்கு பட வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. இதனால், நடிப்பின் மீது தான் என் கவனம் உள்ளது. கல்யாணம் குறித்து வரும் தகவல்கள் உண்மையில்லை. காதலும் இல்லை, பிரேக்கப்பும் இல்லை என கூறியிருந்தார்.

விரைவில் திருமணம்: தற்போது மீண்டும் நிவேதா தாமஸ் காதலில் விழுந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "It's been a while..... but. Finally!" என குறிப்பிட்டு ஹார்ட் சிம்பிள் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இவர் காதலித்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸில் கூறி வருகிறார்கள். அவர் விரைவில் தனது திருமணம் நடைபெறும் தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்த்துள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது மட்டுமில்லாமல், மாப்பிள்ளை யார் என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: nivetha thomas marriage darbar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X