இன்ஸ்டாகிராமில் பல பெண்களுக்கு ஆபாச வீடியோ.. பிரபல யூடியூபர் சிக்காவின் மகன் செய்த மோசமான செயல்!
சென்னை: ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக்கில் வீடியோவை வெளியிட்டு பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பல சர்ச்சைகளில் சிக்கிய ரௌடி பேபியின் ஆண் நண்பர் தான் சிக்கா. இவரின் மகன் இன்ஸ்டாகிராமில் பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
யூடியூபர் சிக்காவின் மகன்: பாண்டிச்சேரியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலும் அறிமுகமானவர் தான் சிக்காவின் மகன் அஷ்ரப் அலி. முதலில் யார் என்றே தெரியாமல் அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி, பின் நாட்கள் செல்லச் செல்ல இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இருக்கிறார் அஷ்ரப் அலி. மேலும், அந்த சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, அதேபோல நிர்வாண வீடியோவை அனுப்பும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளான்.

சிறையில் அடைப்பு: இந்த விஷயம் சிறுமியின் அம்மாவிற்கு தெரியவர அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து பாண்டிச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராமில் சிறுமியை மிரட்டியது பிரபல யூடியூபரான சிக்கந்தர் என்கிற சிக்கா மற்றும் சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி என்பது தெரியவந்துள்ளது. ரௌடி பேபி என அழைக்கப்படும் திருச்சியைச் சேர்ந்த சூர்யா என்பவர், அஷ்ரப் அலியின் சித்தி என்றும் சிக்காவும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. இந்த விஷயம் பெரிதானதை தெரிந்து கொண்ட அஷ்ரப் அலி, போலீஸ் விசாரணையில் சிக்காமல் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அவனை தேடி வந்த போலீசார், மதுரையில் அவனை கைது செய்து புதுச்சேரிக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்தனர்.
பல பெண்களுக்கு ஆபாச வீடியோ: மேலும், அஷ்ரப் அலியின் போனை போலீசார் ஆய்வு செய்ததில், அவர் பல பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்துவந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சிறுமியின் தாயார் ரௌடி பேபி சூர்யா, சிக்கா, சுமி ஆகியோர் சிறுமியை மிரட்டியதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மூன்று பேரிடமும் போலீசார் விசாணை நடத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications











