பெரிய நடிகர்களின் படமே திணறது..ஆனால்,TTF வாசனை மக்கள் ஏத்துப்பாங்க.. மஞ்சள் வீரன் இயக்குனர் பேட்டி!
சென்னை: TTF வாசன் முதல் படத்திலேயே முன்னணி நடிகராக வருவார் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று மஞ்சள் வீரன் பட இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். அவருக்கு யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள முதல் திரைப்படம் மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

டிடிஎப் வாசன்: மஞ்சள் வீரன் படத்தை செல் அம் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக யூடியூப் பிரபலம் அமலா ஷாஜி ஹீரோயினாக நடிக்கிறாரா என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாக வில்லை.
முன்னணி நடிகராவார்: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் செல்அம், இன்னைக்கு எத்தனையோ முன்னணி நடிகர்களின் படமே தியேட்டரில் ஓடாமல் திணறுகிறது. ஆனால் டிடிஎப் வாசன் முதல் படத்திலேயே முன்னணி நடிகராகி விடுவார். மக்களின் ஆதரவு அவருக்கு நிச்சயம் உண்டு என்றார்.

அது உங்களின் அறியாமை: இதையடுத்து செய்தியாளர், வாசன் பைக் ஓட்டுவாரு, அடிக்கடி வழக்கில் சிக்குவாரு என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எதை வைத்து அவர் முன்னணி நடிகராக வருவார், மக்கள் மனதில் இடம் புடிப்பார் என்று எப்படி சொல்றீங்க என்று கேட்டதற்கு பதில் அளித்த இயக்குநர், வாசன் இந்த படம் வெளியாகும் போது 100சதவீதம் முன்னணி நடிகராக இருப்பார். இது எனக்கு நன்றாக தெரிகிறது. உங்களுக்கு இது தெரியவில்லை என்றால், அது உங்களின் அறியாமையை காட்டுகிறது என்று பதில் அளித்துள்ளார்.
வாய்ப்பில்லை ராஜா: இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்து டென்ஷனான இணையவாசிகள், 40 கதை கேட்ட அஸ்வினுக்கே டப் கொடுப்பாரு போல என்றும், நீ ஒருத்தன் போதும் TTF வாசனை கிளோஸ் என்ன என்றும், வாய்ப்பில்லை ராஜா என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











